முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
மருத்துவம் :: சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்

21. ஆயுர் வேத மருத்துவம் என்றால் என்ன?
வேத உறுப்புகளில் ஆயுள் வேதமும் ஒன்று. ஆயுள் வேத மருத்துவம் இதன் பகுதியாகும்.
22. ஆயுர் வேத மருத்துவம் என்னும் வழக்காறு எவ்வாறு உண்டாயிற்று?
ஓவுதம் என்னும் சொல் ஒளஷதம் என்றாயிற்று. ஓஷதம் என்றால் ஒருமுறை பூத்துக் காய்த்து அழியும் பூண்டுகளையே குறிக்கும். ஒளஷதம் ஒளடதம் என்றும் ஓஷம் ஓடதம் என்றும் தமிழில் வழங்கலாயின. ஆகவே, ஒளஷதம் என்னும் பெயரே பெரும்பாலும் மூலிகை வகைகள் செய்யப்படும் மருத்துவமே ஆயுர்வேத மருத்துவம் எனவாயிற்று.
23. ஆயுர் வேத வைத்திய முதல் நூல் எது?
ஐத்ரேய சம்கிதை என்னும் நூலாகும். இதை எழுதியவர் ஐத்ரேயர்.
24. இதில் கூறப்படாதவை எவை?
இதில் உப்பு, உலோகவகை, இரசபாஷனங்கள் ஆகியவை பற்றிய குறிப்பில்லை.
25. ஆயுர் வேத மருத்துவத்தின் சிறப்பியல்புகள் யாவை?
1. நோயாளியைத் தொடுதல், பார்த்தல், விசாரித்தல் மூலம் நோய் அறியப்படுகிறது.
2. புல், பூண்டு, மூலிகை வகைகளை மருந்தாக ஆயுர் வேதம் பயன்படுத்துகிறது.
3. ரிக் வேதத்தில் நீரைப் பற்றியும் மூலிகைகளைப் பற்றியும் பேசப்படுகின்றன.
4. ஆயுர் வேதம் மக்களுக்கச் சாவு உண்டு என்று ஒப்புக் கொள்கிறது.
26. யுனானி மருத்துவம் என்றால் என்ன?
மூலிகைகளை அடிப்படையாகக் கொண்ட அரபு மருத்துவம். எல்லா நோய்களுக்கும் இதில் மருந்துண்டு.
27. நரம்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் யுனானி மருந்துகள் யாவை?
மக்சேவாஜான், ஜல்கோஷா, துக்மே கஷார் முதலியவை இலேகிய வடிவில் உள்ளவை.
28. யுனானி மருத்துவத்தைப் பரப்பும் மருத்துவ மாத இதழ் யாது? இதன் ஆசிரியர் யார்?
யுனானி மருத்துவம். ஆசிரியர் டாக்டர். ஹக்கீம், எஸ். ஏ. சையத் சத்தார்.
29. சித்த மருத்துவ வளர்ச்சிக்காகவுள்ள மைய அரசு அமைப்பு யாது?
மைய அரசு மன்றம். சித்த மருத்துவ ஆராய்ச்சி - ஆயுர் வேத ஆராய்ச்சி. அரும்பாக்கம், சென்னை 106.
30. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காகவுள்ள தமிழ்நாடு அரசு அமைப்பு எது?
இந்திய மருத்துவ இயக்ககம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆயுர், மருத்துவம், மருத்துவ, யுனானி, என்னும், அரசு, சித்த, ஒளஷதம், என்றால், இதில்