முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
மருத்துவம் :: சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
11. சித்தர் பாடல்கள் கூறுபவை யாவை?
மருந்துண்ணாமல் உடலை நோயின்றி வைத்திருத்தல் பற்றிக் கூறியுள்ளனர். அது யோகத்தால் உடலைப் பாதுகாக்கும் வழி. இப்பாடல்கள் மருத்துவ நூல்கள்.
12. சித்தர்கள் கொள்கை நாட்டிலே பரவுவதால் ஏற்படும் பெருநன்மை யாது?
மக்களிடயே அன்பும் ஒற்றுமையும் வளரும்.
13. சித்த மருத்துவ நூல்கள் எத்தகைய மொழியில் உள்ளன?
மக்கள் பேசும் தமிழ் மொழியில் உள்ளன.
14. ஆயுர் வேதத்திலிருந்து சித்த மருத்துவம் பிறந்ததா?
இல்லை. சித்த மருத்துவர்கள் இதை மறுப்பர். மாறாக, சித்த மருத்துவத்திலிருந்துதான் ஆயுர் வேதம் தோன்றிற்று என்பர். தவிர, ஆயுர் வேதத்தில் இல்லாத தனிக் கூறுகள் சித்த மருத்துவத்தில் உண்டு.
15. புகழ் பெற்றவரும் காலஞ் சென்றவருமான ஆயுர் வேத வைத்தியர் பண்டிட் டி. கோபாலாச்சார்லு ஒர் ஆயுர் வேத மாநாட்டில் முடிவாகப் பேசியது என்ன?
ஆயுர்வேதமுறைகளை பார்க்கிலும் அகத்திய வைத்திய முறை (சித்த மருத்துவ முறை) அநேக விதத்தில் வேறு பட்டதாகவே உள்ளது. அகத்திய வைத்திய சம்பந்த மான நூல்களில் உள்ள பரிபாஷைச் சொற்கள் (கலைச் சொற்கள்) வடமொழி நூல்களில் காணப்படாமல் இருப்பதே இதற்குப் போதுமான பிரமாணமாகும்.
16. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுமுன் சீகாழி வைத்தியர் சி.எஸ். நாராயணசாமி அய்யர் கூறியது யாது?
பல சித்தர்களால் ஏற்பட்ட ரசாயன சாஸ்திரங்களே ஆயுர் வேதமாகும். இவைகள் குகைகளில் வைக்கப் பட்டிருந்தன. தவிரச் சரக்குகளைக் கட்டும் வகை ஆயுர் வேதத்தில் கிடையாது.
17. இரசவாதம் என்றால் என்ன? இதில் வல்லவர்கள் யார்?
இரும்பைப் பொன்னாக்கல் இரசவாதம் ஆகும். இதில் வல்லவர்கள் சித்தர்கள். இவர்கள் இரசவாதிகள். இரசவாதமே பின் இரசாயனமாயிற்று.
18. நீண்ட நாள் வாழ்வது எவ்வாறு என்று சித்தர்கள் கூறுகிறார்கள்?
சித்தர்கள் கொள்கை மக்கள் சாகாமல் வாழலாம் என்பதே. இதற்கான பயிற்சியும் காயகல்பம் என்னும் மருந்தும் சித்தர் நூல்களில் குறிப்பிடப்படுகின்றன.
19. சித்த மருத்துவத்தில் கூறப்படுகின்ற மூன்று யாவை?
மணி, மந்திரம், மருந்து. இவற்றில் மணி என்பது சோதிடத்தைக் குறிக்கும்.
20. போகர் என்பவர் யார்?
சீனத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர். 18 சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். இவர்தம் மருத்துவ முறைகள் போகர் எழுநூறு, போகர் இரத்தின வைப்பு முதலியவை இவர் பெயரில் வழங்குபவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆயுர், சித்த, மருத்துவ, சித்தர்கள், போகர், நூல்களில்