முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
மருத்துவம் :: சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்
1. சித்த மருத்துவம் என்றால் என்ன?
சித்தர்கள் கண்ட தமிழ் மருத்துவம். இயற்கையோடு இயைந்தது. நீண்ட நெடிய வரலாறுள்ளது. இதைத் திருவள்ளுவரும் மருந்து என்னும் அதிகாரத்தில் சிறப்பிக்கின்றார்.
2. இதன் தனிச்சிறப்பென்ன?
1. காசு அதிகச் செலவின்றி அனைவருக்கும் பயன்படக் கூடிய மருத்துவம்.
2. மருந்தே உணவுப்பொருளாக அமைவதால் ஊறுபாடு இல்லை.
3. சிறந்த உணவு நெறி.
3. சித்த மருத்துவத்தில் பயன்படக்கூடிய மருந்துகளின் வடிவம் என்ன?
பஸ்பம், செந்துரம், மெழுகு மற்றும் மூலிகைகள்.
4. சித்த மருத்துவத்தை வளர்த்தவர்கள் யாவர்?
பண்டைக் காலத்தில் வாழ்ந்த அறிவாளிகளும் சித்தர்களும் ஆவார்கள்.
5. சித்த மருத்துவத்தின் நோக்கம் என்ன?
பொதுமக்கள் நோயின்றி வாழ வேண்டும். நீண்ட காலம் உறுதியான உடம்புடன் வாழ வேண்டும்.
6. சித்தர்கள் வளர்த்த மற்றொரு கலை என்ன?
அறிவுக் கலையாகும்.
7. சித்தர்கள் 18 பேர் யாவர்?
1. திருமூலர்.
2. இராமதேவர்.
3. கும்பமுனி.
4. இடைக் காடர்.
5. தன்வந்திரி.
6. வான்மீகி.
7. கமலமுனி.
8. போக நாதர்.
9. மச்சமுனி.
10. கொங்கணர்.
11. பதஞ்சலி.
12. நந்திதேவர்.
13. போதகுரு.
14. பாம்பாட்டிச் சித்தர்.
15. சட்டை முனி.
16. சுந்தரானந்த தேவர்.
17. குதம்பைச் சித்தர்.
18. கோரக்கர்.
8. சித்தர் வைத்திய நூல்களை ஆராய்ந்த சித்தர்கள் யாவர்?
1. கோதமர்.
2. அகத்தியர்.
3. சங்கரர்.
4. வைரவர்.
5. மார்க்கண்டர்.
6. வன்மீகர்.
7. உரோமர்.
8. புசுண்டர்.
9. சட்டைமுனி.
10. நந்தீசர்.
11. திருமூலர்.
12. காலாங்கி.
13. மச்சமுனி.
14. புலத்தியர்.
15. கருவூரார்.
16. கொங்கனர்.
17. போகர்.
18. புலிப்பாணி.
9. சித்த மருத்துவத்தின் தனித் தன்மைகள் யாவை?
1. தென்னிந்தியாவில் மூலிகைகள், இரசவர்க்கங்களைக் கையாளும் அகத்திய வைத்தியம் காணப்படுகிறது. இரச வகைகளால் செய்யும் மருந்து முறைகள். தமிழ்நாட்டாருடைய தனிமுறைகளாகும்.
2. உலோகங்களையும் தாது வகைகளையும் கொண்டு செய்யப்படும் பஸ்பம், செந்தூரம், திராவகம் முதலிய பலகை முறைகள் வடமொழியிலுள்ள இரசாஸ்திரங்களுக்கு வேறுபட்டவைகளாக உள்ளன.
3. தமிழ் முறைகளின்படி உலோகங்கள், இரசவர்க்கங்கள் முதலியவற்றை நீற்றுப் பஸ்பம், சிந்துரங்களாக எளிதில் செய்து விடலாம்.
4. செயநிரால் பாஷாண முதலியவைகளைக் கட்டி, சன்னி, வாதம் முதலிய மிகக் கடுமையான நோய்களுக்குக் கொடுப்பதால் குணம் ஏற்படுகிறது.
5. வடமொழியிலுள்ள ஆயுர்வேத நூல்களில் கூறப்பட்டுள்ளவாறு அப்பிரேகத்தை நூற்றுக்கணக்கான புடங்களில் எரித்தாலன்றி அதிலுள்ள மினுமினுப்பு நீங்குவதில்லை. ஆனால், தமிழ் முறைப்படி பத்துப் புடத்தில் மினுமினுப்பு மறைந்து பஸ்பமாகிறது. தவிர, அப்பஸ்பத்திற்கு வீறும் அதிகமாகும்.
6. கட்டு மருந்துகளை மிகக் கொடுமையான நோய்களுக்கு மிகவும் சிறிய அளவில் இரண்டு வேளைக்கு மேல் பயன்படுத்துவதில்லை. இவ்வகை மிகச் சிறந்த நூற்றுக்கணக்கான முறைகள் தமிழ் மருத்துவத்தில் உள்ளன.
7. நாடி பார்ப்பது சித்த மருத்துவத்திற்கே உரியது.
8. சாகாமல் வாழ மருந்துண்டு என்பது சித்த மருத்துவம்.
9. இரச, பாஷாண வகைகள் சித்த மருத்துவத்திற்கே உரியவை.
10. சித்த மருத்துவத்தைப் பற்றித் தமிழ் அறிஞர்கள் கருத்து என்ன?
சித்தர்கள் சிறந்த அறிவியல் அறிவு படைத்திருந்தனர். சித்த மருத்துவம் தமிழக அறிஞர்களால் கண்டுபிடிக்கப் பட்ட தனி மருத்துவம்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சித்த, மருத்துவம், சித்தர்கள், தமிழ், என்ன, முறைகள், சித்தர், பஸ்பம், சிறந்த, யாவர்