மருத்துவம் :: இதயம்
81. மாற்று இதயம் எவ்வாறு பொருத்தப்படுகிறது?
மாற்று இதயம் பெறுபவரின் மார்புக் கூட்டின் நடு எலும்பு நீக்கித் திறக்கப்படும். பெருந்தமனியும் நுரையீரல் தமனியும் இறுக்கியால் மூடப்படும். இதயமேலறைகள் வெட்டப்பட்டு நோயுற்ற இதயம் அகற்றப்படும். அந்த இடத்தில் மாற்று இதயம் வைக்கப்பட்டு மேலறைகள் பொருத்தப்படும். நுரையீரல் தமனி நேரடியாக இணைக்கப்படும். பின் இதய அறைகளிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டுப் பெருந்தமனி இடுக்கி அகற்றப்படும். இப்பொழுது குருதி ஒட்டம் துவங்கும். இதயமும் துடிக்கும். மாற்று இதயம் பெற்றவர்கள் இதய ஊக்கி மருந்தைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். சைக்ளோஸ்போரின் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
82. மாற்று இதயம் பொருத்துவதின் நிலை என்ன?
இதுவரை மாற்று அறுவை செய்து கொண்டவர்களில் 80% பேர் 7 ஆண்டுகளுக்கும் 75% பேர் 2 ஆண்டு களுக்கும் உயிர் வாழ்ந்துள்ளனர்.
83. எஞ்சிய சதவீதத்தினர் உயிர் இழப்பதற்குரிய காரணிகள் யாவை?
1. இதயம் மறுக்கப்படுதல்.
2. இதயத்துடிப்பு மாறுபாடு.
3. மூளைப்பாதிப்பு.
4. நோய்த்தொற்று.
84. மாற்றுஇதயம் பொருத்தப்படுவதற்குத் தகுதி உடையவர் யார்?
1. இதயக்கீழறை அளவுக்கு அதிகமாக விரிவடைந்த நோயாளிகள்.
2. இதயத்திறப்பிகள் கோளாறுகளுடன் இதயத்தசை நோயுள்ளவர்.
3. காரணம் அறிய இயலாத நோயால் உடன் இறக்கும் வாய்ப்புள்ளோர்.
85. இவர்களுக்கு நடத்தப்படும் ஆய்வுகள் யாவை?
1. உயிர்வேதிஇயல் ஆய்வு.
2. நுண்ணுயிரி ஆய்வு.
3. நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வு.
4. குருதி ஆய்வுகள்.
5. தசை ஆய்வுகள்.
6. இதயத்தமனிச் சாய வரைபடம்.
86. மாற்று இதயம் யாரிடமிருந்து பெறப்படுகிறது?
மூளை மட்டும் இறப்புக்குள்ளான ஒருவரிடமிருந்து உரிய முறையில் பெறப்படுகிறது. 15 - 35 வயதுள்ள ஆண்களிடமும், 15 - 40 வயதுள்ள பெண்களிடமும் இவ்விதயம் பெறப்படுகிறது.
87. அகற்றப்பட்ட இதயம் எதில் வைக்கப்படுகிறது?
40 செ. குளிர்நிலையில் உப்புநீரில் நான்கு மணிநேரம் வைக்கப்படும்.
4. செயற்கை இதயம்
88. செயற்கை இதயத்தை யார் எப்பொழுது புனைந்தார்?
1983இல் அமெரிக்க ஹவிஸ்டன் மருத்துவமனையைச் சார்ந்த டாக்டர் இராபர்ட் கே. ஜார்விக் என்பார் புனைந்தார். இதற்கு ஜார்விக்-7 என்று பெயர். இவர் இதை முதலில் ஆடு, மாடு, குரங்கு முயல் போன்ற விலங்குகளுக்கு ஆய்வுநிலையில் பொருத்தி வெற்றியடைந்தார். இது நெல்லிக்காய் அளவில் இருந்தது.
89. செயற்கை இதயம் எவ்வாறு இயங்குகிறது?
இது நோயாளியின் மார்புக்குள் பொருத்தப்படும். கீழ்ப்பெருஞ்சிரை மேற்பெருஞ்சிரை, நுரையீரல்தமனி ஆகியவை மின்உந்தியின் வலப்பக்கப் பையோடு இணைக்கப்படும். நுரையீரல் சிரைகளும் பெருந்தமனியும் இடப்பக்கப் பையோடு சேர்க்கப்படும். உந்தி இயங்கும்பொழுது அதனுள் இருக்கும் வட்ட வடிவத் தகடு ஒன்று முதலில் வலப்பக்கப் பையைச் சுருங்கச் செய்யும். இதனால் அங்கிருந்து குருதி நுரையீரல்களுக்குச் செல்லும். பின், அத்தகடு இடப்பக்கப் பையைச் சுருங்கச் செய்யும். இப்பொழுது அங்குள்ள குருதி பெருந்தமனிக்குள் செல்லும். பின் உடலின் பல பகுதிகளுக்கும் செல்லும். இவ்வாறு இயற்கை இதயத்தைப் போலவே இது இயங்கும். செயற்கை
90. இதயம் எத்தனை வடிவங்களில் உள்ளது?
ஐந்து வடிவங்களில் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இதயம், மாற்று, செயற்கை, குருதி, நுரையீரல், செல்லும், பெறப்படுகிறது, ஆய்வு, ஆய்வுகள், பின்