மருத்துவம் :: இதயம்
71. இவ்வறுவையின் பொழுது செய்யப்படுபவை யாவை?
1. ஈரிதழ்த்திறப்பிச் சுருக்கம் விரிவாக்கப்படுதல்.
2. பெருந்தமனியின் துளையை அடைத்தல்.
3. இதய வெளியுறையை நீக்குதல்.
4. நுரையீரல் தமனியைச் சுருக்குதல்.
5. இதயமுடுக்கியைப் பொருத்துதல்.
72. அமெரிக்க அறுவை மருத்துவர்கள் ஹெலன் புரூக் டசிக், ஆல்பிரட் பிலாலக் ஆகிய இருவரும் செய்த அருஞ்செயல் யாது?
இவர்கள் உடலில் நீல நிறத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை முறையைக் கண்டுபிடித்தனர்.
73. மாற்று இதய அறுவை முதன்முதலில் எவற்றில் செய்யப்பட்டது, செய்தது யார்?
1905இல் காரல், குதாரி ஆகிய இருவரும் ஆய்வுநோக்கில் விலங்குகளில் இந்த அறுவையை மேற்கொண்டனர். ஒரு விலங்கின் பழுதடைந்த இதயத்தை நீக்கிவிட்டு மற்றொரு விலங்கின் இதயத்தை அதில் பொருத்தினர்.
74. 1960இல் நடந்த மாற்று இதய அறுவை ஆய்வுகள் யாவை?
இயோ, இயார்வே ஆகிய இரு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 8 விலங்குகளுக்கு மாற்று இதயம் பொருத்தினர். இவை 21 நாட்கள் உயிர்வாழ்ந்தன.
75. முதன்முதலில் மாற்றுவழி அறுவையைச் செய்தவர் யார்?
1960இல் அர்ஜண்டைனாவைச் சார்ந்த ஆண்டு ரேனே ஃபவலோரா என்பார் இதைச் செய்தார்.
76. கிறிஸ்டியன் பர்னார்டு செய்த அருஞ்செயல் யாது?
1967 டிசம்பர் 3இல் இவர் மனிதனுக்கு முதன்முதலில் மாற்று இதயத்தை அறுவை மூலம் பொருத்தினார். அறுவை நடந்த இடம் தென்ஆப்பிரிக்காவில் கேப்டவுன், குருட்சர் மருத்துவமனை.
77. இது எப்படி நிகழ்த்தப்பட்டது?
50 வயதுள்ள லூயிஸ் வாஸ்கன்சி என்பார் நோய்வாய்ப் பட்ட இதயத்தை அகற்றிவிட்டுச் சாலை விபத்தில் மூளை இறப்பு ஏற்பட்டு இறப்பை நெருங்கிக் கொண்டிருந்த 25 வயது இளைஞன் டேனிஸ் ஆன்டார்வல் என்பவனின் இதயத்தைப் பொருத்தினார். நோயாளி 28 ஆண்டுகள் உயிரோடு இருந்தார்.
78. அமெரிக்காவில் எப்பொழுது மாற்று அறுவை நடந்தது?
1968 ஜனவரி மற்றும் மே மாதத்தில் நடந்தது. ஜனவரியில் சியாம்வே என்பவரும் மே மாதத்தில் கூலி என்பவரும் மாற்று இதயத்தைப் பொருத்தினர்.
79. இந்தியாவில் முதன்முதலில் மாற்று இதய அறுவை செய்தவர் யார்?
இந்தியப் புதுத்தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவர் வேணுகோபால் 1994 ஆகஸ்ட் 3இல் முதன்முதலில் மாற்று இதய அறுவையை வெற்றிதரும் வகையில் செய்தார்.
80. இயல்பு (நோய்) இதயம் எவ்வாறு அகற்றப்படுகிறது?
இதயம் வழங்குபவரின் நடுமார்பு கீறப்பட்டு இதயம் உரிய முறையில் எடுக்கப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அறுவை, மாற்று, முதன்முதலில், இதயம், இதயத்தை, யார், பொருத்தினர், ஆகிய