மருத்துவம் :: இதயம்
131. குருதிக்குழாய் அடைப்பு (embolism) என்றால் என்ன?
ஏதாவது ஒரு திண்பொருளால் குருதிக் குழாயில் ஏற்படும் தடை உறைகட்டி, கொழுப்புத் துணுக்கு, கட்டியணு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று திண்பொருள் ஆகும். அல்லது காற்றுக் குமிழியும் தடை ஏற்படுத்தலாம்.
132. இதயத்தசை நோய்களின் மூன்று வகைகள் யாவை?
1. இதயத்தசை விரிவு நோய்
2. இதயத்தசைக் குறுக்க நோய்
3. இதயத்தசைப் பெருக்கநோய்
133. இதயத்தசை அழற்சி என்றால் என்ன?
இதயத்தின் நடுவுறை வீங்குதல்.
134. இதயத்தசைக் கட்டிகள் என்பவை யாவை?
இதயத்தசையில் கட்டிகள் தோன்றுவது அரிது. அப்படித் தோன்றினாலும் அவற்றில் 75% தீங்குதராக் கட்டிகள். 25% தீங்குதரும் புற்றுநோய்க் கட்டிகள்.
135. பிறவி இதய நோய்கள் யாவை?
1. இதய மேலறை இடச் சுவர்த்துளை.
2. இதயக் கீழறைச் சுவரில் துளை.
3. ஃபேலட்டின் நான்மைக் குறைபாடுகள்.
4. பெருந்தமனி-துரையீரல் தமனி இணைப்புக்குழாய் திறப்பு.
5. இதயப் பெருந்தமனி இடமாற்றம்.
6. பெருந்தமனி இறுக்கம்.
7. நுரையீரல்தமனிக் குறுக்கம்.
8. மூவிதழ்த்திறப்பி வளர்ச்சியின்மை.
136. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் பிறவி இதய நோய் சதவீதம் என்ன?
சுமார் 2% .
137. கருவளர்ச்சியின் எந்தக் காலத்தில் இதய வளர்ச்சி தடைப்படுகிறது?
ஐந்தாம் வாரம் தொடங்கி எட்டம் வாரம் வரை உள்ள காலம்.
138. இப்பொழுது இதயத்தின் இயல்பான வளர்ச்சியைத் தடைப்படுத்தும் காரணிகள் யாவை?
1. தொற்றுநோய்கள்
2. மரபணுக்குறைபாடுகள்
3. தாய் உட்கொள்ளும் மருந்துகள்
4. ஊட்டக்குறைவு.
இவை பிறவி இதயநோய்கள் உண்டாகக் காரணிகள் ஆகும்.
139. குருதி வாந்தியின் அறிகுறி என்ன?
குடல்புண் என்பது பொருள்.
140. குறைந்த துடிப்பு என்றால் என்ன?
இயல்புக்கு மாறான குறைந்த நாடித் துடிப்பு. தலை காயமுறும்பொழுதும் இதயத் தடையின் பொழுதும் ஏற்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, கட்டிகள், யாவை, பெருந்தமனி, பிறவி, இதயத்தசை, நோய், என்றால்