மருத்துவம் :: இதயம்

121. குருதிக் குழாய் அடைப்பின் தீமைகள் யாவை?
இந்த அடைப்பு மூளைக் குருதிக் குழாயில் ஏற்பட்டால் பக்க வாதம் உண்டாகும். கைகளின் குருதிக் குழாய் ஏற்பட்டால் அழுகல் நோய் உண்டாகும்.
122. இதயத்தளர்ச்சி (heart failure) என்றால் என்ன?
உடல் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் போதிய குருதியை இதயம் அளிக்காத நிலை. இது இதய இட, வலக் கீழறைகளைப் பாதிக்கும்.
123. இதயத்தளர்ச்சியின் இரு வகைகள் யாவை?
1. கடும் இதயத் தளர்ச்சி
2. நாட்பட்ட இதயத் தளர்ச்சி
124. இதய வலிக்குக் (angina) காரணம் என்ன?
இதயத் திசுக்களுக்குக் குருதி கொண்டு செல்லும் இதயத் தமனிகளில் கொழுப்பு படிந்து அவற்றைச் சுருங்கச் செய்யாது.
125. இதய வலிக்கு முதல்உதவி என்ன?
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நைட்ரேட் மருந்துகள் ஒன்றை உட்கொள்ளச் செய்தல். கிளிசரல் நைட்ரேட்.
126. இதய வலிக்குரிய பண்டுவ முறைகள் யாவை?
1. மாற்றுவழி அறுவை
2. இதயத்தமனிச் சீரமைப்பு
3. லேசர் ஒளி அளித்தல்
127. இதய வலியைத் தடுக்கும் முறைகள் யாவை?
1. புகைபிடிக்காதிருத்தல்
2. உடல் எடையை வயதிற்கும் உயரத்திற்கும் தகுந்தவாறு பேணுதல்.
3. உடற்பயிற்சி செய்தல்.
4. நடத்தல்.
5. கொழுப்பு உணவுப் பொருள்களைக் குறைத்தல்.
128. மாரடைப்புநோய் (heart attack) என்றால் என்ன?
இதயத் தமனிகள் குறுக்களவு குறைந்து இறுதியாக குருதிக் குழாய் வழியில் குருதி உறையும். இதனால் ஏற்படும் அடைப்பே மாரடைப்பு. குருதி நாளத்தால் உணவையும் உயிர்வளியையும் பெறும் இதயத் திசுக்கள் நசிவுறும்.
129. இதய நிறுத்தம் (cardiac arrest) என்றால் என்ன?
மிகக் கடுமையான மாரடைப்பைத் தொடர்ந்து இதயம் சட்டென்று முழுதும் செயலிழத்தல். இதனால் மூச்சு நின்று இறப்பு நிகழும்.
130. இதற்கு முதல் உதவி யாது?
1. இதயத்தைப் பிசைதல்
2. செயற்கை மூச்சு அளித்தல்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இதயத், என்ன, குருதிக், யாவை, குருதி, என்றால், குழாய்