மருத்துவம் :: இதயம்
101. இதய மின்னலை வரைபடத்தின் மூலம் நாம் அறிந்து கொள்பவை யாவை?
1. இதயத்துடிப்பு எண்ணிக்கை.
2. இதயத்துடிப்புச் சந்தம்.
3. கடத்தும் திறன்.
4. மாரடைப்பு.
5. இதயச் செயலமைப்பு.
6. இதயவீக்கம்.
7. மருந்துகளின் நச்சுத்தன்மை.
102. இதய நுரையீரல் எந்திரத்தை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
1953இல் அமெரிக்க அறுவை மருத்துவர் ஜான் கிப்பன் இதைப் புனைந்தார். திறப்பு இதய அறுவை முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே.
103. குழந்தைகளுக்குத் திறப்பு இதய அறுவை எப்பொழுது நாடறிந்ததாயிற்று?
1972க்குப் பின் நாடறிந்ததாயிற்று.
6. இதய நோய்கள்
104. இதய நோய் குறித்து அறிவதற்குரிய இரு அணுகு முறைகள் யாவை?
1. நோயாளி பற்றிய வரலாறு
2. நோய்க்குறிகள்
105. இதயநோய்க்குறிகள் யாவை?
1. மார்புவலி
2. மூச்சுமுட்டல்
3. நெஞ்சப் படபடப்பு
4. உடல் சோர்வு
5. மயக்கமுறுதல்
106. இதய ஆய்வுகள் யாவை?
1. இதய மின்னலை வரைபடம்
2. இதய ஊடுகதிர்ப் படம்
3. இதய எதிரொலி ஆய்வு
4. இதய காந்த அதிர்வலைப்படம்
5. இதய உட்புகு ஆய்வு
6. கதிரியக்க ஆய்வுகள்
107. அதிர்ச்சி என்றால் என்ன?
இது மனித உடலில் பொதுக் குருதி ஓட்டக் குறைபாடு காரணமாக ஏற்படும் நோயியம் ஆகும்.
108. இந்த அதிர்ச்சியின் வகைகள் யாவை?
1. குருதியோட்டக் குறை அதிர்ச்சி
2. இதயத் திறனிழப்பு அழற்சி
3. நச்சுக்குருதி அதிர்ச்சி
4. அதி ஒவ்வாமை அதிர்ச்சி
109. இந்த அதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை?
1. உடல் வெப்பக் குறைவு.
2. இதயம் படபடக்கும். நாடித்துடிப்பு மிகும்.
3. பெருமூச்சு வாங்கும்.
4. குருதியழுத்தம் குறையும்.
5. நோயாளியால் நடக்க இயலாது. கிறுகிறுப்பு மயக்கம் இருக்கும்.
6. சிறுநீர் பிரியாது.
110. இதய அழற்சி என்றால் என்ன?
இதயத் தசை வீங்குதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, அதிர்ச்சி, அறுவை