மருத்துவம் :: இதயம்
91. இந்த இதயத்தால் ஒருவர் எத்தனை ஆண்டு வாழ இயலும்?
இதுவரை இரண்டு ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர்.
92. செற்கை இதயத்தால பயன்பெறக் கூடியவர் யாவர்?
1. மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
2. இதய இடைச்சுவரில் துளை பெரிதான நிலையில் உள்ளவர்.
3. இதயத்திறப்பிகள் பழுதடைந்தவர்கள்.
4. இதயக் கீழறைகள் இரண்டும் பாதிக்கப்பட்டவர்கள்.
5. நீலநிறக் குழந்தைகள்.
மாற்றுஇதயம் செயல் இழக்கும்பொழுது, செயற்கை இதயம் பயன்படுத்தப்படலாம்.
93. செயற்கை இதயத்தின் பயன்கள் யாவை?
1. இயற்கை இதயங்கள் அரிதாகவே கிடைக்கும். செயற்கை இதயத்தை வேண்டிய அளவுக்கு உற்பத்தி செய்யலாம்.
2. செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர்கள் சைக்ளோப்போரின் உட்கொள்ளத் தேவையில்லை.
3. அவசர அறுவைக்கு இதைப் பொருத்தலாம்.
4. அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம்.
94. இதை ஏழைகள் பயன்படுத்த முடியுமா?
முடியாது. விலை அதிகம்.
95. புதிய ஜார்விக் செயற்கை இதயம் என்பது யாது?
1989இல் ஜெர்சன் ரோசன்பர்க் எனும் அமெரிக்க உடலியல் பொறியாளர் புனைந்த செயற்கை இதயமாகும். இது வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் பழைய ஜார்விக்-7 லிருந்து வேறுபட்டது. இது எலுமிச்சை அளவில் உள்ளது.
5. இதயக்கருவிகள்
96. இதய வரைவு என்றால் என்ன?
இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் படம்.
97. இதயவரைவி என்றால் என்ன?
இதய அலை இயக்கத்தை வரைபடமாகப் பதிவு செய்யும் கருவி.
98. இதய மின் வரையம் என்றால் என்ன?
இதயத்தசைகள் சுருங்கும்பொழுது மின்வேறுபாடுகளின் ஒளிப்படப் பதிவு. இதயநிலையைக் கண்டறிய எடுக்கப்படுவது (ECG)
99. மூளை மின்வரையம் என்றால் என்ன?
பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக்கப்படும் மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்தல் (EEG)
100. இதயமுடுக்கி என்றால் என்ன?
இதயத்துடிப்பின் அளவைச் சீராக்க மனித உடலில் பொருத்தப்படும் சிறிய மின்னணுக்கருவி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதயம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - செயற்கை, என்ன, என்றால், பதிவு, இதயம்