கணிதம் :: அலகியலும் அளவியலும்
81. உடன்மாறல் எண் என்றால் என்ன?
இரு மாறிகளுக்கிடையே உள்ள இயைபை அளக்கும் புள்ளி விபரம்.
82. மாறி என்றால் என்ன?
மாறும் பண்புடைய அளவு. இதன் மதிப்பு n என்னும் ஒர் எழுத்தால் குறிக்கப்படும்.
83. மாறியின் வகைகள் யாவை?
முழு மாறி, சார்பு மாறி, சார்பிலா மாறி. முழுமாறியில் மதிப்பு 0 -10 வரை இருக்கும். சார்புமாறியில் மதிப்புகள் 1, 4, 9,.... என்னும் அளவில் இருக்கும். சார்பிலா மாறியில் இத்தகைய மதிப்புகள் இல்லை. அது x, y என்னும் பெயர் பெறும்.
84. பகுதி வகைக்கெழு என்றால் என்ன?
மாறிகளில் ஒன்று மாறும்பொழுது, ஏனையவை நிலையாக இருக்கப் பலமாறிகளின் சார்பு மாற்ற வீதமாகும் இது.
85. பகுதி வகையீடு என்றால் என்ன?
ஏனையவற்றை நிலையாக வைத்து, மாறிகள் ஒன்று மட்டும் மாறுவதின் விளைவாக உண்டாகும் மிக நுண்ணிய மாற்றம். எல்லாப் பகுதி வகைக் கெழுக்களின் கூட்டுத் தொகை முழு வகைக் கெழுவே.
86. நீக்கி (எலிமினண்ட்) என்றால் என்ன?
கெழுக்களுக்கிடையே உள்ள உறவு. ஒருங்கமை சமன் பாடுகளின் கணத்தில் இருந்து மாறிகளை விலக்குவதால் உண்டாவது.அணி, அணிக் கோவைச் சமன்பாட்டினால் விலக்கி குறிக்கப்படும்.
87. நீக்கல் என்றால் என்ன?
இயற்கணிதச் சமன்பாட்டில் தெரியாதனவற்றில் ஒன்றை நீக்கல். மாறிகளை மாற்றீடு செய்வதாலும் அடித்த லாலும் இதைச் செய்யலாம்.
88. பை என்பது என்ன?
ஒரு வட்டப் பரிதிக்கும் அதன் குறுக்களவுக்குமுள்ள வீதம். பொதுவாக இதன் அளவு 3.14159 க்குச் சமம். இது ஒரு கடந்த எண். அதாவது, அதன் துல்லிய மதிப்பை எழுத இயலாது.ஆனால், மிகத் துல்லியமாக அளக்கலாம்.
89. பல அறிஞர்கள் கூறியுள்ள π இன் மதிப்புகள் யாவை?
1. எகிப்தியர்கள் π = (16/92) = 3.160
2. ஆர்க்கிமெடிஸ் 3.10/71 < π < 3.10/71
3. தாலமி π = 3.17/20
4. ஆரியபட்டர் π = 3.1416
5. பாஸ்கரர் π = 3. 01416
6. இராமானுஜன் π = 315/113
7. எப். வியட்டா π = 10 தசம இடங்கள்
8. ஈடோல் வான் கியூலன் π = 3க்குப்பின் 35 தசம இடங்களைக் கொண்டது.
90. இடஞ்சுழி என்றால் என்ன?
வலஞ்சுழிக்கு நேர்மாறானது. கடிகாரமுள்கள் தலை கீழாக நகர்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மாறி, பகுதி, மதிப்புகள், என்னும்