கணிதம் :: அலகியலும் அளவியலும்
171. சதுரம் என்றால் என்ன?
சமபக்கங்களையும் சம கோணங்களையுங் கொண்ட ஒரு நாற்கரம்.
172. கனஅளவு என்றால் என்ன?
குறி V. ஒரு கன உருவம் அடைத்துக் கொள்ளும் இடம். அலகு m3.
173. கனசதுரம் என்றால் என்ன?
வடிவியலில் ஆறு சதுரமுகங்களைக் கொண்ட கன உருவம். பருமன் V=l3. l - பக்கநீளம்
174. முப்படி என்றால் என்ன?
ஒரு எண்ணின் அல்லது மாறியின் மூன்றாம் படி. ∝ இன் முப்படியாவது ∝ x ∝ x ∝ = ∝3.
175. கனமூலம் என்றால் என்ன?
மூன்று அடுக்குகளைக் கொண்ட கோவை. கொடுக்கப் பட்ட எண்ணுக்குச் சமம். 27 இன் கனமூலம் 3, ஏனெனில், 33 = 27.
176. கன உருவம் என்றால் என்ன?
முப்பரும உருவம். எ-டு. கோளம், கன சதுரம், திண்மம்.
177. கனச்சதுரச் செவ்வகம் என்றால் என்ன?
பெட்டி வடிவ கன உருவம். ஆறு செவ்வக முகங்களாலானது. எதிர் முகங்கள் அனைத்தும் சமம். மற்றும் ஒரு போக்கானவை. எட்டு உச்சிகள் ஒவ்வொன்றிலும் மூன்று முகங்கள் ஒன்றுக்கு மற்றொன்று செங்கோணத்தில் இருக்கும்.
V = l x b x h
178. கன உருவ வடிவியல் என்றால் என்ன?
முப்பருமன்களிலுள்ள வடிவங்களை ஆராயுந்துறை.
179. அரைவட்டம் என்றால் என்ன?
பரிதியில் பாதியாலும் குறுக்களவாலும் எல்லையிடப் பட்ட பாதி வட்டம்.
180. பரப்பு (surface) என்றால் என்ன?
இரு பருமன்களில் விரியும் புள்ளிகளின் இயங்கு வரை. இது பரப்பளவு என வரையறுக்கப்படும். பரப்பு தட்டையாகவோ (தளப்பரப்பு) வளைவாகவோ, வரம்புள்ளதாகவோ, வரம்பற்றதாகவோ இருக்கலாம்.
எ-டு. தளம் 2 = 0 என்பது முப்பருமன்களில் இருப்பது. கார்ட்டீசியம் ஆயங்கள் தட்டையானவை, முடிவற்றவை. கோளத்தின் வெளிப்பக்கம் வளைந்தும் வரம்புள்ள தாகவும் இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, உருவம், கொண்ட