கணிதம் :: அலகியலும் அளவியலும்
151. இதன் இரு பகுதிகள் யாவை?
1. உச்சி. - 2. விளிம்பு.
152. இதன் வகைகள் யாவை?
1. ஒழுங்குள்ள பன்முகி, 2. குழிபன்முகி, 3. குவிபன்முகி.
153. எண்முகி என்றால் என்ன?
எட்டு முகங்களைக் கொண்ட ஒரு பன்முகி. ஒர் ஒழுங்கான எண்முகி எட்டு முகங்களைக் கொண்டது. ஒவ்வொரு முகமும் ஒரு சமபக்க முக்கோணம்.
154. எண்மம் என்றால் என்ன?
எண் 8 அடிப்படையில் அமைந்த முறை. வேறுபட்ட 8 எண்களைக் கொண்டது.8 என்பது 10 ஆகவும் 9 என்பது 11 ஆகவும் எழுதப்படும். –
155. நான்முகி என்றால் என்ன?
முக்கோணக் கூம்பகம். நான்கு முக்கோணகளால் எல்லையிடப்பட்ட கன உருவம். ஒழுங்கான நான்முகி தன் முகங்களாக நான்கு அனைத்துச் சமபக்க முக்கோணங்களைக் கொண்டிருக்கும்.
156. ஒன்பகம் என்றால் என்ன?
9 நேர்ப்பக்கங்களைக் கொண்ட தள உருவம். ஒர் ஒழுங்குள்ள பக்ககம் ஒன்பது சம பக்கங்களையும் ஒன்பது சம கோணங்களையும் கொண்டது.
157. இரு சமதளமுகி என்றால் என்ன?
வெட்டும் இரு தளங்களால் தோன்றுவது. ஒரு நேர்க் கோடு நெடுக இரு தளங்கள் வெட்டும்.
158. மூடிய பரப்பு என்றால் என்ன?
எல்லைக்கோடுகள் அல்லது வளைகோடுகள் இல்லாத பரப்பு. எ-டு. கோளம், நீள்வட்டக் கோளகம்.
159. பொது அச்சு வட்டங்கள் என்றால் என்ன?
ஒரு வட்டத் தொகுதியில் ஒவ்வோர் இரட்டை வட்டங்களும் ஒரே கோட்டைச் சமத்தொடு அச்சாகக் கொண்டிருப்பின், அவை பொது அச்சு வட்டங்கள்.
160. இதய வடிவவரை என்றால் என்ன?
ஒரு வளைவை மட்டுங் கொண்ட வட்ட வளைவரி. ஒரே ஆரமுள்ள மற்றொரு வட்டத்தின் பரிதியைச் சுற்றி ஒரு வட்டத்திலுள்ள புள்ளி வழி சுழல்வதால் உண்டாவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கொண்டது, கொண்ட