கணிதம் :: அலகியலும் அளவியலும்

131. பெருவட்டம் என்றால் என்ன?
ஒரு கோளப் பரப்பின் வட்டம். கோளம் போலவே ஒரே ஆரத்தைக் கொண்டது. கோண மையத்தின் வழியாகச் செல்லும் தளத்தில் குறுக்கு வெட்டு மூலம், பெருவட்டம் தோற்றுவிக்கப்படுவது.
132. நீள்வட்டக் கோளம் (எலிப்சாய்டு) என்றால் என்ன?
நீள்வட்டகம். ஒவ்வொரு தளக் குறுக்கு வெட்டும் நீள் வட்டம் அல்லது வட்டமாகவுள்ள கன உருவம் அல்லது வளைபரப்பு. இக்கோணத்திற்கு மூன்று சமச்சீர் அச்சுகள் உண்டு. .
133. இதன் வகைகள் யாவை?
1. முனைவழி நீள்வட்டக் கோணம்.
2. எதிர்த்திசை நீள்வட்டக் கோணம்.
134. சரிவகம் என்றால் என்ன?
ஓர் ஈரிணை எதிர்ப் பக்கங்கள் மட்டும் இணையாகவுள்ள நாற்கரம் சரிவகமாகும். ஒரு சரிவகத்தில் இணையில்லாத பக்கங்கள் அனைத்துச் சமமாக இருந்தால், அது இரு சமபக்கச் சரிவகம்.
135. சரிவக விதி யாது?
ஒரு வளைகோட்டில் தோராயப் பரப்பைக் காணப் பயன் படும் விதி. அதைப் பல சரிவக வடிவ இணைப் பகுதி களாகப் பிரித்தல். கிடைமட்ட அச்சில் அமையும் அடிகளோடு சம அகலமுள்ள செங்குத்து நிரைகள் இதனால் தோன்றும். எண்வகைத் தொகையீட்டு முறையாக இவ்விதி பயன்படுவது.
136. கூம்பின் வகைகள் யாவை?
1. வட்டக்கூம்பு. 2. செங்கூம்பு.
137. கூம்பச்சு என்றால் என்ன?
அடிக்கு மையமுள்ள பொழுது, உச்சியிலிருந்து இதற்குமுள்ள கோடு கூம்பச்சு.
138. கூம்பு என்றால் என்ன?
முக்கோணம் தன் செங்கோணமடங்காகிய பக்கங்களில் ஒன்றை அச்சாகக் கொண்டு சுழலும் பொழுது உருவாகும் கன வடிவம். இது தொடர்பான வாய்பாடுகள்.
மொத்தப்பரப்பு TSA = πr(l+r)
கன அளவு V = 1/3πr2h கன அலகுகள்.
வளைபரப்பு CSA = πrl சதுர அலகுகள்.
139. கூம்பின் பகுதிகள் யாவை?
பிறப்பாக்கி, இயக்குவரை, உறுப்பு.
140. வளையம் என்றால் என்ன?
இரு பொது மைய வட்டங்களுக்கு இடையே உள்ள பகுதி. இதன் பரப்பு π(R2-r2). R - பெரு வட்ட ஆரம்m r- சிறுவட்ட ஆரம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, யாவை, நீள்வட்டக்