கணிதம் :: அலகியலும் அளவியலும்
![Units and Measurement](images/units_and_measurement.jpg)
121. உயரம் என்றால் என்ன?
அடிக்கோடு அல்லது தளத்திலிருந்து வழக்கமாக மேல் நோக்கியுள்ள செங்குத்துத் தொலைவு. எ-டு. உச்சிக்கு எதிராகவுள்ள முக்கோன அடியிலிருந்து அமையும் செங்குத்துத் தொலைவு, கனசதுர அடித் தளங்களின் மேல்தளங்கள் ஆகியவை உயரமாகும்.
122. சுருள் என்றால் என்ன?
சுருள் வடிவ இடவளைகோடு. எ-டு. திருகாணி மரை அல்லது புரிசுருள்.
123. உச்சி என்றால் என்ன?
1.கோடுகள் அல்லது தளங்கள் ஓர் உருவத்தில் சந்திக்கும் புள்ளி, எ-டு. கூம்பின் உச்சிப் புள்ளி. பல கோண மூலை.
2. ஒரு கூம்புவரையின் அச்சு, ஒரு கூம்பு வரையை வெட்டும் புள்ளிகளில் ஒன்று.
124. உருவம் என்றால் என்ன?
புள்ளிகள், கோடுகள், வளைகோடுகள், பரப்புகள் முதலியவை சேர்ந்து உண்டாக்கும் வடிவம்.வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள் ஆகியவை தள உருவங்கள். கோணங்கள், கன சதுரங்கள், கூம்பகங்கள் முதலியவை திண்ம உருவங்கள்.
125. உருத்திரிபு என்றால் என்ன?
வடிவியல் உருமாற்றம். உருவம் விரிவது, சுருங்குவது, திருகுவது. ஆனால், அதன் கோடுகள், பரப்புகள் எதையும் அது முறிப்பதில்லை.
126. உள்வளை என்றால் என்ன?
ஒரு வளைகோட்டின் இரண்டாம் கோடு. முதல் வளைகோட்டில் சுற்றப்பட்ட இறுக்கமான கயிற்றைப் பிரிக்கக் கிடைப்பது. நூலின் முனையினால் வரையப்படும்.
127. கிடைமட்டம் என்றால் என்ன?
மேசை உச்சி கிடைமட்டப் பரப்பாகும். ஒரு தட்டையான பக்கத்திற்குப் பக்கமுள்ள நேர்க்கோடு கிடைமட்டக் கோடு ஆகும்.
128. மேல்மட்டம் என்றால் என்ன?
ஒரு வட்டம் மற்றொரு வட்டத்தின் பரிதியைச் சுற்றி உருளள். இதனால் மேல் வட்ட வரை உண்டாகும்.
129. மேல்வட்டவரை (எபிசைக்ளாய்டு) என்றால் என்ன?
ஒரு வட்டம் அல்லது மேல் வட்டத்தில் உண்டாகும் தள வளைவு.
130. இதன் இயல்புகள் யாவை?
1. மற்றொரு நிலையான வட்டத்தின் வெளிப்புறமாக உருள்வது.
2. சுற்றளவுச் சமன்பாடுகளில் இது வரையறை செய்யப்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அல்லது, கோடுகள், மேல்