கணிதம் :: அலகியலும் அளவியலும்
101. நேர்க்கோடு என்றால் என்ன?
ஒரு தட்டையான பரப்பல் இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மிகக் குறைந்த தொலைவு.
102. பொதுத் தொடுகோடு என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட வளைகோடுகளுக்குத் தொடு கோடாக அமையும் ஒரு தனிக்கோடு. இரு தொடு கோட்டுப் புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டின் நீளத்திற்கு உறுப்பு என்றும் பெயர்.
103. செங்குத்துக்கோடு என்றால் என்ன?
மற்றொரு கோடு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள கோடு.
104. இசையுங்கோடு (போலார்) என்றால் என்ன?
வட்டத்தின் உள்ளேயோ வெளியேயோ உள்ள புள்ளி P வழியாகச் செல்லும் கோடு, வட்டத்தை Q, R என்னும் புள்ளிகளில் வெட்டினால், Q, R புள்ளிகளிடத்து வட்டத்திற்கு வரையும் தொடு கோடுகளின் வெட்டும் புள்ளிகளின் இயங்குரை, புள்ளி P இன் வட்டத்தைச் சார்ந்த இசைக் கோடு ஆகும்.
105. ஈற்றணுகுகோடு என்றால் என்ன?
ஒரு வளைகோடு ஒரு நேர்க்கோடு நோக்கி அணுகும். ஆனால் அதைச் சந்திக்காது. எ-டு. அதிபரவளைவு இரு அணுகு கோடுகளைக் கொண்டது.
106. குறுங்கோடு என்றால் என்ன?
இரு புள்ளிகளுக்கிடையே ஒரு பரப்பிலுள்ள கோடு. இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மிகக் குறைந்த தொலைவு. ஒரு தளத்தில் ஒரு குறுங்கோடு ஒரு நேர்க் கோடு ஆகும்.
107. எண்கோடு என்றால் என்ன?
ஒரு நேரான கிடைமட்டக்கோடு. இதில் ஒவ்வொரு புள்ளியும் மெய் எண்ணைக் குறிக்கும். அலகுத் தொலை வுக்கு அப்பால் குறிக்கப்படும் புள்ளிகள் முழுக்கள் ஆகும்.
108.சமச்சீர் என்றால் என்ன?
ஒர் அடிப்படைக் கருத்து. சமமாக அல்லது போல அமைதல் என்பது பொருள். இயற்பியல், வேதியியல், கணக்கு உயிரியல் ஆகிய அறிவியல்களில் பயன்படுவது.
109. ஒரு திண்பொருளின் சமச்சீர் என்றால் என்ன?
ஒரு திண் பொருளில் சமச்சீர் என்பது ஒன்று-ஒன்று தொலைவாகும். பொருள் தன்னுள் பிணைவைதக் காப்பது. எ-டு. T(P)=P', T(Q)=Q' என்றால் d(P', Q')=d(P, Q)
110. ஒரு சமப்பக்க முக்கோணத்தின் சமச்சீர்கள் என்றால் என்ன?
ஒரு சமபக்கமுக்கோணம் மூன்று சுழல் சமச்சீர்களையும் மூன்று அச்சு எதிரொளிப்புச் சமச்சீர்களையும் கொண்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கோடு, ஆகும், சமச்சீர், உள்ள, புள்ளிகளுக்கிடையே, தொடு