கணிதம் :: அலகியலும் அளவியலும்
91. வலஞ்சுழி என்றால் என்ன?
இயக்கம் வலமிருந்து இடம் அமைதல். எ டு. கடிகார முட்கள் சுற்றிவருதல்.
92. திட்டம் என்றால் என்ன?
1. ஒப்பீடு. திட்டமான வடிவத்தில் ஒரு சமன்பாட்டை எழுதுவது. அதே வகை சேர்ந்த மற்றச் சமன்பாடுகளை ஒப்பிட உதவும்.
எ-டு. x2/42 + y2/22 = 1
x2/32 + y2/52 = 1
இச்சமன்பாடுகள் செவ்வக் கார்ட்டீசியன் ஆயங்களில் அதிபரவகைச் சமன்பாடுகள் ஆகும். இவை இரண்டும் திட்டவடிவத்தில் எழுதப் பயன்படுபவை.
2. திட்டஅளவு கருவி..இதை அடிப்படையாகக் கொண்டு மற்றக் கருவிகள் அளவு குறிக்கப்படும்.
3. ஒர் எண்ணின் திட்ட வடிவம்.
93. திட்ட விலக்கம் என்றால் என்ன?
தரப்பட்டுள்ள இராசிகளின் அனைத்து மதிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு பரவலின் மொத்தச் சிதறலையும் கணக்கிட இது உதவுகிறது. சராசரிகளில் சிறந்ததாகிய கூட்டுச் சராசரியை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இது நல்லதொரு சிதறல் அளவாகக் கருதப்படுகிறது.
94. திட்ட விலக்கம் காண செய்ய வேண்டியதென்ன?
1. தரப்பட்டுள்ள இராசிகளின் கூட்டுச் சராசரி கான வேண்டும்.
2. கூட்டுச் சராசரிக்கும் ஒவ்வொரு சராசரிக்கும் உள்ள விலக்கம் d=x-x என்று கணக்கிட வேண்டும்.
3. d2 காண வேண்டும்.
4. விலக்க வர்க்க சராசரி σ2=∑d2/n
5. திட்ட விலக்கம் σ = √∑d2/n
95. குறுக்களவு என்றால் என்ன?
விட்டம். தன் அகன்ற புள்ளியில் ஒரு கன உருவம் ஒரு வட்டம் அல்லது கோணத்தின் விட்டம் ஆரத்தின் இரு மடங்கு ஆகும். அல்லது தள உருவத்திற்குக் குறுக்கேயுள்ள தொலைவு.
96. வேறுபாடு என்றால் என்ன?
1. ஒர் அளவு அல்லது கோவையை மற்றொன்றிலிருந்து சுழிப்பதால் ஏற்படும் முடிவு. 2. கழித்தல்.
97. சமத்தொடு வரைமையம் என்றால் என்ன?
சமத்தொடு அச்சுகள் ஒரு புள்ளி வழிச் செல்லும் பொழுது, அப் புள்ளி சமத்தொடு வரையம் எனப்படும்.
98. சமத்தொடு கோட்டு அச்சு என்றால் என்ன?
ஒரு புள்ளி, அதிலிருந்து இரு வட்டங்களுக்கு வரையப் படும் தொடு கோடுகளின் நீளங்கள் சமமாய் இருக்கு மாறு அமைந்தால், அப்புள்ளியின் இயக்குவரை அவ்விரு வட்டங்களின் சமதொடு அச்சு எனப்படும்.
99. மூலம் (ரேடிகல்) என்றால் என்ன?
√2 . இங்கு √ என்பது மூலக்குறி.
100. கோடு என்றால் என்ன?
ஒரு பரப்பில் இரு புள்ளிகளின் சேர்ப்பு. இதற்கு நீளம் உண்டு; அகலம் இல்லை. ஒரு பருமனே உண்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, சமத்தொடு, விலக்கம், திட்ட, புள்ளி, அடிப்படையாகக், வேண்டும், கூட்டுச், அல்லது