கணிதம் :: இயற்கணிதம்
1. இயற்கணிதம் என்றால் என்ன?
குறிக்கணிதம். எண் கணிதச் செயல்கள், மாறிகள் அல்லது எண்களாகக் குறிக்கப் பயன்படும் குறியீடுகளை ஆராயும் கணக்குப் பிரிவு. பொதுவாக, இது கணித முழுமைகளையும் (அணிகள், கணங்கள்), செயல்களை யும் (கூட்டல், கழித்தல்), கணித முழுமைகளுக்கிடையே உள்ள உறவிற்கான முறையான விதிகளையும் கொண்டது.
2. பூல் இயற்கணிதம் என்றால் என்ன?
19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜார்ஜ் பூல் என்னும் கணித மேதையால் உருவாக்கப்பட்டது. மெய் அல்லது பொய்யான முறையமை ஆணைகளைச் சுருக்கெழுத்தில் கணிப்பொறியில் அமைக்கும் முறை.
3. இயற்கணிதத்தை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக.
3x(4+2) = (3×4)+(3×2). இது எண் கணிதம் சார்ந்தது; குறிப்பிட்ட எண்களுக்கு மட்டும் பயன்படுவது. ஆனால், x(y+z) = xy+xz. இச்சமன்பாடு இயற்கணிதத்தில் ஒரு கோவை.
4. இயற்கணிதத்தின் வகைகள் யாவை?
தொடக்க இயற்கணிதம், பொது இயற்கணிதம், அணி இயற்கணிதம், திசைச்சாரி இயற்கணிதம், பூல் இயற்கணிதம் எனப் பலவகை.
5. நுண்இயற்கணிதம் என்றால் என்ன?
இது பண்புதொகு இயற்கணிதம். சில வெளிப்படை உண்மைகளுக்குரிய கணங்களை ஆராய்வது.
6. தொடக்க இயற்கணிதம் என்றால் என்ன?
சமன்பாடுகளை வசதியான வடிவத்தில் கையாளும் முறைகளை இது கூறுகிறது.
7. உயர்நிலை இயற்கணிதம் என்றால் என்ன?
இதில் அணி இயற்கணிதம், திசைச்சாரி இயற்கணிதம், பூல் இயற்கணிதம் அகியவை அடங்கும்.
8. அணி இயற்கணிதம் என்றால் என்ன?
அணிகளுக்கிடையே உள்ள உறவுகளை இது ஆராய்வது.
9. திசைச்சாரி இயற்கணிதம் என்றால் என்ன?
இது திசைச்சாரிகளை ஆராய்வது.
10. இயற்கணித வடிவியல் என்றால் என்ன?
வடிவ கணிதத்தைக் குறியீடுகளில் விளக்குவது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்கணிதம் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இயற்கணிதம், என்ன, என்றால், பூல், ஆராய்வது, கணித, திசைச்சாரி