புவியியல் :: மண்ணும் மரமும்
31. பாலைவனங்களில் சிறியது எது?
ஈரான் பாலைவனம்.
32. மிக வறண்ட பாலைவனம் எது?
அடகாமா. 1971 வரை 400 ஆண்டுகளாக இங்கு மழை பெய்யவில்லை.
33. உறைந்த பாலைவனம் என்பது எது?
ஆண்டார்க்டிகா கண்டம்.
34. பாலைவனக்கப்பல் எது?
ஒட்டகம்.
35. பொதுவாகப் பாலைவனங்கள் சராசரியாகப் பெறும் மழை அளவு எவ்வளவு?
ஒராண்டுக்கு 25 செ. மீ க்குக் குறைவு.
36. பாலைவனச் சோலை என்றால் என்ன?
நிலத்திற்குக் கீழிருந்து நீர்க் கிடைக்கும் இடத்தில் பாலை வனத்தில் தாவரங்கள் நன்கு வளரும். இந்நிலப்பகுதியே பாவைனச்சோலை. பாலைவனம் வழியாகச் செல்வோருக்கு இது தங்குமிடமாகும்.
37. பாலைவன உயிரினங்கள் யாவை?
விலங்குகள் - ஒட்டகம், தேள், சதங்கைப் பாம்பு, கிலா மான்ஸ்டர், கங்காரு , எலி.
தாவரங்கள்- பூஞ்சைகள், கள்ளி வகைகள், சப்பாத்தி.
38. பாலைவனங்கள் அளவில் மாறுமா?
சில சமயங்களில் அளவில் மாறும். சில சமயங்களில் அவை பெருகுவதும் ஏனைய சமயங்களில் சுருங்குவதுமாக உள்ளன. 1987 இல் சகாரா பாலைவனம் தெற்கே ஒரு பகுதியில் 54 கி.மீ. பரவியது. ஆனால் 1988 இல் வடக்கே அது 96 கி.மீ பின் வாங்கியது.
39. மணல் எல்லாப் பாலைவனங்களிலும் உள்ளனவா?
இல்லை. பெரும்பாலான பாலைவனங்களில் பாறைகளும் கற்களும் உள்ளன.
40. பாலைவனத்தின் மூன்று இயல்புகள் யாவை?
வறட்சி, வெப்பநிலை உயர்வு, மழையின்மை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்ணும் மரமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பாலைவனம், சமயங்களில்