புவியியல் :: மண்ணும் மரமும்

21. ஆசியாவில் பாலைவனங்கள் எங்குள்ளன?
தென்மேற்கு ஆசியா முதல் மங்கோலியா வரை. எ-டு. அரேபியா பாலை, தார்பாலை. இங்குக் கள்ளி, கற்றாழை, முட்புதர்கள் முதலியவை வளர்கின்றன.
22. மையத் தரைக்கடல் தாவரப் பகுதி எங்குள்ளது?
ஆசியா மைனர் கடற்கரையோரப் பகுதி. இங்கு ஒக், மல்பரி, ஆலிவ், லாரல், அக்ருட் முதலிய தாவரங்கள் வளர்கின்றன.
23. பாலைவனம் என்றால் என்ன?
பெரிய வட்டாரச் சமுதாயம். குறைந்த மழையும் மிகக் குறைந்த தாவர வளமும் உள்ளது.
24. உலகிலுள்ள பாலைவனங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. உள் வெப்ப மண்டலப் பாலைவனங்கள்
2. குளிர் கடற்கரைப் பாலைவனங்கள்
3. மாரிக்காலப் பாலைவனங்கள்
25. உள்வெப்ப மண்டலப் பாலைவனங்கள் யாவை?
1. சகாரா - வடஆப்பிரிக்கா
2. அரேபியப் பாலைவனம் - மையக்கிழக்கு
3. கிரேட் விக்டோரியா - ஆஸ்திரேலியா
4. கலகாரி - தென் ஆப்பிரிக்கா
5. சிகுவாகுவான் - மெக்சிகோ
6. தார் பாலைவனம் - பாகிஸ்தான்
7. பெரும்மணற் பாலைவனம்- ஆஸ்திரேலியா
8. கிப்சன் பாலைவனம் - ஆஸ்திரேலியா.
9. சோனாரான் பாலைவனம் - தென்மேற்கு அமெரிக்கா
10. சிம்சன் பாலைவனம் - வட ஆப்பிரிக்கா
11. மொகேவ் பாலைவனம் - தென்மேற்கு அமெரிக்கா
26. குளிர்கடற்கரைப் பாலைவனங்கள் யாவை?
அடகாமா - தென் அமெரிக்கா
நமிப் - தென் மேற்கு ஆப்பிரிக்கா
27. மாரிக் காலப் பாலைவனங்கள் யாவை?
1. கோபி - சீனா
2. படகோனியன் - அர்ஜன்டினா
3. கிரேட்பேசின் - தென்மேற்கு அமெரிக்கா
4. காராகும் - மேற்கு ஆசியா
5. கொலோரடோ - மேற்கு அமெரிக்கா (வண்ணப்பாலை)
6. கைசல்கும் - மேற்கு ஆசியா
7. டக்ளாமக்கன் - சீனா
8. ஈரான் - ஈரான்
28. நாடு வாரியாக அமைந்த பாலைவனங்கள் எத்தனை?
1. அமெரிக்கா - 5
2. ஆப்பிரிக்கா - 4
3. ஆஸ்திரேலியா - 3
4. ஆசியா - 2
5. சீனா - 2
6. மெக்சிகோ - 1
7. இந்தியா - 1
8. மையக் கிழக்கு - 1
9. ஈரான் - 1
10. மெக்சிகோ - 1
29. பாலைவனங்கள் அதிகமுள்ள நாடு எது?
அமெரிக்கா.
30. பாலைவனங்களில் பெரியது எது?
சகாரா
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்ணும் மரமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பாலைவனங்கள், பாலைவனம், அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, மேற்கு, ஆஸ்திரேலியா, தென்மேற்கு, யாவை, ஈரான், சீனா, தென், மெக்சிகோ