புவியியல் :: மண்ணும் மரமும்
11. ஓரிடத்தின் இயற்கைத் தாவரத்திற்குரிய காரணிகள் யாவை?
வெப்பம், மழையளவு, உயரம், மண்.
12. பலவகை இயற்கைத் தாவரங்கள் ஆசியாவில் வளரக் காரணம் யாவை?
ஆசியாவில் எல்லா வகைத் தட்ப வெப்பநிலையும் மண் வகையும் உள்ளன.
13. ஆசியாவில் வளரும் பலவகை இயற்கைத் தாவரப் பகுதிகள் யாவை?
1. தூந்திரப் பிரதேசம்
2. ஊசியிலைக் காடுகள்
3. அகன்றஇலைக் காடுகள்
4. ஸ்டெப்பி புல்வெளி
5. பாலைவனங்கள்
6. மையத் தரைக்கடல் தாவரம்
7. பருவக்காற்றுக் காடுகள்
8. நிலநடுக்கோட்டுக் காடுகள்.
14. அகன்றஇலைக் காடுகள் எங்குள்ளன?
மஞ்சூரியா, வடசீனா. இக்காடுகளில் உள்ள முக்கிய மரங்கள் ஒச், எல்ம், பீச், செஸ்நட்
15. பருவக்காற்றுக் காடுகள் எங்குள்ளன?
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ். இக்காடுகளில் தேக்கு, செம்மம், தேவதாரு முதலியவை வளர்கின்றன.
16. மையத்தரைக் காடுகள் எங்குள்ளன?
மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ். இவை அடர்ந்த காடுகள். பசுமை மாறாதவை. இக்காடுகளல் பல்வகை மரங்கள், பனை வகைகள், பெரணி வகைகள், செடிகொடிகள் முதலியவை வளர்கின்றன.
17. தூந்திரப்பிரதேசம் எங்குள்ளது?
ஆசியாவில் வடஎல்லையில் ஆர்க்டிக்கடலை ஒட்டிய நீண்ட நிலப்பரப்பு.
18. இங்கு வளரும் தாவரங்கள் யாவை?
புல், புதர், பூப்பாசிகள், பலவகைப் பூக்கள்.
19. ஊசியிலைக் காடுகள் எங்குள்ளன?
சைபீரியத் தாழ்நிலங்கள், மையச் சைபீரியப் பீடபூமி, காம்சட்கா தீபகற்பம். இக்காடுகளில் பசுமை மாறாப் பிர், சிடார், லார்ச், பைன், ஸ்புரூஸ் முதலிய மரங்கள் வளர்கின்றன.
20. ஸ்டெப்பி புல்வெளி எங்குள்ளது?
யுக்ரேன் பகுதி, மையச் சைபீரியா. இங்குக் காணப்படும் முக்கியப் புல்வகை கிராமினி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மண்ணும் மரமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காடுகள், யாவை, எங்குள்ளன, ஆசியாவில், வளர்கின்றன, மரங்கள், இக்காடுகளில், இயற்கைத்