புவியியல் :: கடல்கள் பொதுச்செய்திகள்
51. நடுக்கேர்ட்டு நீரோட்டம் உள்ள கடல்கள் யாவை?
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல்.
52. கல்ப் நீரோட்டமுள்ள இரு கடல்கள் யாவை?
அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல்.
53. பெருவியன் நீரோட்டமுள்ள இரு கடல்கள் யாவை?
பசிபிக் பெருங்கடல், அண்டார்க்டிக் பெருங்கடல்.
54. ஓத அல்லது அலை ஏற்றம் என்றால் என்ன?
ஆறுகளின் தொடுவாய்ப்பகுதியிலும் அலை பொங்கு முகப்பகுதியிலும் உள்நோக்கி வரும் ஓத அலை சட்டென்று கிளர்ந்து எழுவது.
55. கடல் வளங்கள் யாவை?
1. நீர்வளம்.
2. உணவுவளம்.
3. கனிவளம்.
4. உயிர்வளம்.
56. ஓதங்கள் அல்லது ஏற்றவற்றங்கள் என்றால் என்ன?
கடலில் ஓரிடத்தில் நீர்மட்டம் உயர்ந்தும் தாழ்ந்தும் அமைவதே ஓதங்கள்.
57. இவை ஏற்படக் காரணமென்ன?
கதிரவன் மற்றும் திங்களின் ஈர்ப்பு விசையே இதற்குக் காரணம்.
58. இவற்றின் வகைகள் யாவை?
1. உயர்ஓதம்- ஒருநாளில் கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு.
2. தாழ் ஓதம் - கடல் மட்டத் தாழ்வு.
3. மிதவை ஓதம் - பெரும் ஓதங்கள்.
4. ஆற்றோதங்கள் - ஆறுகளில் ஏற்படுபவை.
5. கலப்பு ஓதங்கள் உயர் ஒதமும் தாழ்ஓதமும் சேர்ந்தது.
59. கடல் ஓதங்கள் அல்லது ஏற்றவற்றங்களின் நன்மைகள் யாவை?
1. ஓத ஏற்றத்தின்போது கடல் மட்டம் உயர்வதால் ஆற்று முகத்துவாரங்களில் நீர்மட்டம் உயர்கிறது. எனவே, கப்பல்கள் ஆற்றின் கரைகளிலுள்ள துறைமுகங்கள் வரை வந்து செல்ல முடிகிறது. காட்டாகக் கல்கத்தா துறைமுகம் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஹஅக்ளி ஆற்றில் ஏற்படும் ஓத ஏற்றம் பயன்படுகிறது.
2. ஓதங்களால் ஆற்றுப்படுகையின் வண்டல் படிவுகள் கடலில் கடத்தப்படுகின்றன. எனவே, ஆற்றுமுகத் துவாரங்கள் அகன்று ஆழம் மிகுந்து கப்பல் போக்கு வரத்திற்குப் பயன்படுகின்றன.
60. சுழற்சிக் கொள்கை என்பது யாது?
பெளவல், கில்பர்ட் ஆகியவர்களின் ஆராய்ச்சியால் சக்கர அரிப்புக் கருத்துத் தோன்றியது. நீரின் அரிப்பு விதியைப் பற்றி அறிந்து தெரிய இவ்விதி எல்லோரையும் தூண்டியது. ஆனால், சக்கர அரிப்பைப் பற்றிய தம் முறையை ஆராய்ச்சியை வெளியிட்டவர் எம். டேவிஸ் ஆவார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல்கள் பொதுச்செய்திகள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பெருங்கடல், யாவை, ஓதங்கள், கடல், அல்லது, கடல்கள்