புவியியல் :: கடல்கள் பொதுச்செய்திகள்
41. கண்ட உயர்வு என்றால் என்ன?
கண்டச்சரிவின் சாய்மானம் 0.30 அல்லது 0.50 க்கும் குறையும்போது உண்டாவது.
42. பெருங்கடல் உயர்வு என்றால் என்ன?
கடலடியில் ஒடும்படியான உயரமும் பரப்புகளும் கொண்ட மலைத் தொடர்கள் உள்ளன. இவையே பெருங்கடல் உயர்வு எனப்படும்.
43. பெருங்கடல் வடிநிலங்கள் யாவை?
இவை கண்ட ஒரங்களுக்கும் பெருங்கடல் உயர்வுகளுக்கும் இடையில் உள்ளவை.
44. கடல் அலைகள் என்பவை யாவை?
காற்று வீசும் திசையில் கடல்நீரில் அசைவு ஏற்படுவதைக் கடல் அலைகள் என்கிறோம்.
45. கடல் அலைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
1. கடற்கரைச் சரிவு.
2. காற்றின் விரைவு.
3. கடற்கரைப்போக்கு.
46. பொதுவாக அலைகளின் வேலைகள் யாவை?
1. கரைத்து அழித்தல்.
2. அரித்துத் தின்னல்.
3. உராய்ந்து தேய்த்தல்.
4. நீர்ஈர்ப்பு வாயிலாக அரித்தல்.
47. கடல் அலைகளைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
1. காற்றுகள்.
2. புவியதிர்ச்சி
3. நிலச்சரிவு.
4. கதிரவன் மற்றும் திங்களின் ஈர்ப்புவிசை.
48. கடல் அலைகள் எவ்வாறு உண்டாகின்றன?
நீர்மேற்பரப்பில் காற்றுகள் வீசுவதால் அலைகள் உண்டாகின்றன. நீரை மேல்நோக்கி வருமாறு காற்று வீசுகிறது. இப்பொழுது அலை முகடு உண்டாகிறது. பின் ஈர்ப்பு அதைப் பின்னோக்கி இழுப்பதால் அதை அலை அகடு ஏற்படுகிறது.
49. இதுவரை உற்றுநோக்கப்பட்ட மிகப்பெரிய அலை எது? எப்பொழுது உற்றுநோக்கப்பட்டது?
1933இல் ஒரு கப்பல் பயணத்தில் புயலின்பொழுது உற்றுநோக்கப்பட்டது. உயரம் 34 மீ.
50. கடல்களின் பண்புகள் யாவை?
1. கடல்நீர் கரிப்புள்ளது.
2. கடல்நீருக்கு வெப்பமுண்டு.
3. கடல்நீரை வெப்பப்படுத்தும் ஒரே ஆதாரம் கதிரவன் ஆகும்.
4. கடல்களின் வெப்பப்பரவல் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் உள்ளது.
5. வெப்ப பரவல் குறைவு.
6. கடலில் 96.5% நீரும் 3.5% உப்பும் உள்ளது.
7. கடல்நீரின் அடர்த்தி நன்னீரின் அடர்த்தியை விட அதிகம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல்கள் பொதுச்செய்திகள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, கடல், பெருங்கடல், அலைகள், உயர்வு