புவியியல் :: கடல்கள் பொதுச்செய்திகள்

31. எல் நீனியோ என்றால் என்ன?
இது ஒர் அரிய நிகழ்ச்சி. நிலநடுக்கோட்டுப் பசிபிக் பெருங்கடலில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறுவது.
32. இதன் நன்மை யாது?
அமெரிக்கக் கண்டத்திற்கு அதிக மழையைக் கொடுப்பது.
33. இதன் தீமைகள் யாவை?
1. பசிபிக் கடலுக்கு வறட்சியளிப்பது.
2. மலேரியா, காலரா முதலிய நோய்கள் ஏற்படவும், பசி, பட்டினி, வறட்சி, விளைச்சல் குறைவு உண்டாகவும் இது காரணம்.
34. இதன் விளைவுகள் எப்பொழுது உணரப்பட்டன?
1980இல் இந்தியப் பெருங்கடலிலும் அட்லாண்டிக் பெருங்கடலிலும் உணரப்பட்டன.
35. ஆழ்கடல் சமவெளி என்பது யாது?
கடலடியில் ஒரு பெரும் பகுதி. இதன் பரப்பு குறைந்த சரிவுள்ளது. ஆகவே, இது சமவெளி போல் காட்சி யளிப்பது. இதன் மேற்பரப்பு ஆழ்கடல் உயிரிகளாலான படிவுகளாலும் எரிமலைச் சாம்பலாலும் மூடப்பட்டுள்ளது.
36. கடலடியின் மூன்று பிரிவுகள் யாவை?
1. கண்ட ஓரங்கள்.
2. பெருங்கடல் எழுச்சிகள்.
3. பெருங்கடல் வடிநிலங்கள்.
37. கண்ட ஓரங்கள் யாவை?
பெருங்கடல் வடிநிலத்துடன் கண்டங்கள் சேரும் பகுதிகள்.
38. கண்ட ஓரங்கள் எவற்றாலானவை?
கண்டத்திட்டு, கண்டச் சரிவு, கண்ட எழுச்சி.
39. கண்டத்திட்டு என்றால் என்ன?
கடலில் மூழ்கியுள்ள கண்ட ஒரங்கள். இது சமமட்ட மேடை கடலில் 1300 மீ வரை செல்வது.
40. கண்டச்சரிவு என்றால் என்ன?
கடலடி நிலம் பெருங்கடல் வடிநிலத்தை நோக்கிச் சரிந்திருக்கும் பகுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல்கள் பொதுச்செய்திகள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கண்ட, இதன், பெருங்கடல், ஓரங்கள், யாவை, என்ன, என்றால்