புவியியல் :: இந்தியா

81. கடலுக்கு அடியிலுள்ள பாறைகளிலிருந்து கிடைப்பது எது?
உலக எண்ணெயில் 20% மேல் இப்பாறைகளிலிருந்து கிடைக்கிறது.
82. கனிமங்கள் என்பவை யாவை?
இவை இயற்கைப் பொருள்கள். உயிரற்றவை. புவியில் காணப்படுபவை. 3, 000வகைக் கனிமங்கள் புவியில் உள்ளன. எ-டு வயிரங்கள், சிவப்புக் கற்கள், மரகதம் ஆகியவை விலை மதிப்புள்ளவை. படிகங்கள் முதலியவை அன்றாட வாழ்விலும் கடிகாரங்களிலும் பயன்படுபவை.
83. ஒரு தடவை எவ்வளவு மீன் பிடிக்கலாம்?
1986 இல் நார்வே மீன் படகு ஒரு தடவையில் 2,400 டன்கள் மீன் பிடித்தது. இதில் 120 மில்லியன் மீன்கள் இருந்தன.
84. தாதுப் பொருட்கள் என்பவை யாவை?
கனிமப் பொருள்களே தாதுப்பொருள்கள்.
85. இந்தியாவிலுள்ள தாதுப் பொருள்களின் வகைகள் யாவை?
1. உலோகத் தாதுகள்
2. உலோகமற்ற தாதுக்கள்
3. ஆற்றல் தரும் பொருள்கள்.
86. உலோகத் தாதுக்கள் யாவை?
இரும்பு, செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், ஈயம், அலுமினியம், மாங்கனிஸ் முதலியவற்றின் தாதுக்கள்.
87. இந்தியாவில் பெருமளவு கிடைக்கும் தாதுக்கள் யாவை?
ஹேமடைட், மேக்னடைட்
88. உலோகமல்லாத தாதுக்கள் யாவை?
ஜிப்சம், மைகா(காக்கைப் பொன்).
89. ஆற்றல் தரும் பொருள்கள் யாவை?
நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவளி, அணு ஆற்றல், மின்னாற்றல்.
90. இந்தியாவின் தலையாய நிலக்கரி உற்பத்தி இடம் எது?
தாமோதர் பள்ளத்தாக்கில் உள்ள ஜாரியா நிலக்கரி வயல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, தாதுக்கள், நிலக்கரி, மீன், பொருள்கள்