புவியியல் :: இந்தியா
201. மக்களடர்த்தி குறைவாக இருப்பதால் ஏற்படும் தீமைகள் யாவை?
1. தொழிலாளர் பற்றாக்குறை எழும்
2. சமூகத் தொடர்பு குறைவாக இருக்கும்
202. குடிபெயர்ச்சியின் இரு நிலைகள் யாவை?
1. குடியிறக்கம் - ஒரே நாட்டில் நிலையாகக் குடியிருத்தல்.
2. குடியேற்றம் - ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டில் சென்று இருத்தல்.
203. குடிப் பெயர்ச்சிக்குரிய தள்ளு காரணிகள் யாவை?
1. வேலைவாய்ப்பு இல்லாமை
2. சிறுபான்மையர் ஒடுக்கப்படுதல்
3. இயற்கை வளக்குறைவு.
204. குடிபெயர்ச்சிக்குரிய இழுவைக் காரணிகள் யாவை?
1. நல்ல வேலை வாய்ப்புகள்
2. அதிக வருமானம்
3. உயர் படிப்பு வசதிகள்.
205. வேளாண்மை தொழிலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
1. சூழ்நிலைக் காரணிகள்
2. மரபுக் காரணிகள்
3. பொருளியல் காரணிகள்
4. அரசியல் காரணிகள்.
206. எல்லா வேளாண்தொழில் செயல்களில் உள்ள பொது விதிமுறைகள் யாவை?
1. பயிரும் விலங்கினமும் இணைந்திருத்தல்
2. பயிர்வளர்ச்சி முறைகளைக் கையாளுதலும் வீட்டு விலங்குகளைப் பேணுதலும்.
3. தொழில் முதலீடு, மேலாண்மை ஆகியவற்றை நிலத்தில் தீவிரமாகச் செயல்படுத்துதல்.
4. பண்ணைப் பொருள்களை வெளியேற்றும் முறை.
5. வேளாண்தொழில் நடைபெறவதற்குரிய பொதுக் கூட்டங்களும் அமைப்புகளும்.
207. ஆசியாவில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்கள் எவை?
ஜாவா, ஜப்பான், பங்களாதேஷ், சீனா, இந்தியா, பூரீலங்கா.
208. ஆசியாவில் மக்கள் நெருக்கம் சீராக உள்ள இடங்கள் யாவை?
சிரியா, ஈராக், இஸ்ரேல், லெபனான், துருக்கி, பர்மா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், பிலிப்பைன்ஸ், கொரியா.
209. ஆசியாவில் மிகக் குறைந்த மக்கள் நெருக்கமுள்ள இடங்கள் யாவை?
மேற்கு மங்கோலியா, உருசியாவின் தென்மேற்குப் பகுதி, அரேபியா, இராஜஸ்தான் மேற்குப் பகுதி, தூந்திரப்பிரதேசம்.
8. போக்குவரத்து
210. இந்தியப் போக்குவரத்திற்குரிய நான்கு வழிகள் யாவை?
1. சாலைகள்
2. இருப்பு வழி
3. நீர்வழி (கப்பல்)
4. வானவழி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, காரணிகள், இடங்கள், ஆசியாவில், மக்கள்