புவியியல் :: இந்தியா
191. நம் நாட்டில் மக்கள் தொகை பெருகக் காரணங்கள் என்ன?
1. கொள்ளை நோய்கள் தடுக்கப்பட்டுவிட்டன.
2. மருத்துவ வசதிகளால் இறப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
3. மக்கள் வாழ்நாள் நீண்டுள்ளது.
4. எதிர்பார்த்தபடி குடும்ப நலத்திட்டம் பயன் அளிக்கவில்லை.
192. மக்கள் தொகை அதிகமுள்ள நான்கு நாடுகள் யாவை?
சீனா, இந்தியா, சோவியத்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
193. ஓரிடத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
1. தட்பவெப்ப நிலை.
2. மண்வளம்
3. இயற்கைச் செல்வங்கள்
4. நிலஅமைப்பு
5. மழை
6. நீர்ப்பாசன வசதிகள்
7. போக்குவரத்து வசதி
8. தொழில் வளர்ச்சி
9. நாட்டின் அமைதி.
194. வளங்களில் சிறந்தது எது?
மனித வளம்
195. மனித வளத்தின் இரு கூறுகள் யாவை?
1. அறிவு நலம்
2. சமுதாய நலம்
196. மக்களடர்த்தி அதிகமுள்ள நாடுகள் யாவை?
அமெரிக்கா, எதியோக்கியா, மெக்சிகோ,நைஜீரியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான் முதலியவை.
197. இங்கு மக்களடர்த்தி எவ்வளவு?
ஒரு சதுரக் கிலோ மீட்டருக்கு 150 லிருந்து 21 வரை இருப்பது.
198. மக்களடர்த்தி குறைவாக உள்ள மாநிலம் யாவை?
பிரேசில், அர்ஜெண்டைனா, கொலம்பியா, நியுசிலாந்து, சோவியத்து நாடுகள், எகிப்து முதலியவை. இங்கு ஒரு கி.மீக்கு மக்கள் அடர்த்தி 20க்குக் கீழ் இருக்கும்.
199. மக்களடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடுகள் யாவை?
ஆஸ்திரேலியா, கனடா, அரேபியா, லிபியா.முதலியவை இங்கு மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1-5 வரை இருக்கும்.
200. மக்களடர்த்தி குறைவாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
1. ஒவ்வொருவருக்கும் சராசரி நிலம் அதிகம் கிடைக்கும்.
2. உண்வுச்சிக்கல் எழாது.
3. வேளாண்மைத் தொழிலை எந்திரமாக்குவது எளிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, மக்கள், மக்களடர்த்தி, நாடுகள், குறைவாக, முதலியவை, இங்கு