புவியியல் :: இந்தியா
171. இந்தியாவின் தொன்மையான தொழில் எது?
வேளாண்மை.
172. தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையில் பெருகி வருவதற்கு ஒரு சான்று தருக.
சென்னைத் தரமணி தொழில்நுட்ப வளாகம்.
173. தமிழ்நாட்டில் அயல்நாட்டு முதலீடு பெருகியுள்ளதற்கு இரு சான்றுகள் தருக.
1. போர்டு உந்து வண்டித் தொழிற்சாலை மறைமலை நகரில் அமைந்துள்ளது.
2. ஹூண்டை உந்து வண்டித் தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.
174. இந்திய வானவெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) எப்பொழுது தொடங்கப்பட்டது?
1963 நவம்பர் 21.
175. இதிலுள்ள மையங்கள் யாவை?
1. விக்ரம் சரபாய் வானவெளிமையம் - தும்பா
2. இஸ்ரோ செயற்கை நிலா மையம் - திருவனந்தபுரம்
3. நீர்ம இயக்கு அமைப்பு மையம் - தமிழ்நாடு.
176. ஷார் என்பது என்ன?
ஆந்திராவிலுள்ள ஏவு நிலையம். ஏவுகணைகளையும் செயற்கை நிலாக்களையும் ஏவுவது. 1969 இல் தொடங்கப்பட்டது.
177. இஸ்ரோவின் விற்பனையகம் எது?
ஆண்டிரிக்ஸ் கழகம்.
178. வானவெளி வல்லரசுகள் யாவை?
அமெரிக்கா, உருசியா.
179. இந்தியாவின் குறிப்பிடித்தக்க வானவெளி முயற்சிகள் யாவை?
1. 1962 இல் இந்தியத் தேசிய வானவெளி ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டது.
2.1963 இல் தும்பா ஏவுகணை நிலையம் நிறுவப்பட்டது.
3. 1965 இல் வானவெளி அறிவியல் மையமும் தொழில் நுணுக்க மையமும் உருவாக்கப்பட்டன.
4. 1967 இல் செயற்கை நிலாக்களிலிருந்து செய்திகள் பெற அகமதாபாத்தில் புவி நிலையம் ஏற்படுத்தப் பட்டது.
5. 1968 இல் தும்பா ஏவுகணை நிலையம் பன்னாட்டுக் கழகத்திற்கு உரிமையர்க்கப்பட்டது.
6. 1975 லிருந்து ஆரியபட்ட முதலிய பல செயற்கை நிலாக்கள் ஏவப்பட்டு வருகின்றன. இவை வானிலை அறியவும், செய்திகள் தரவும் பெரிதும் பயன்படுகின்றன.
7. வானவெளி ஆராய்ச்சியில் ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது.
180. தேசியத் தொலையறிவியல் முகமையகம் எங்குள்ளது?
அய்தராபாத்திலுள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வானவெளி, நிலையம், செயற்கை, தும்பா, யாவை