புவியியல் :: இந்தியா
111. இந்தியாவின் காலநிலை எவ்வகை சார்ந்தது?
அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலை.
112. இதை எவ்விரு அடிப்படையில் பிரிக்காலம்?
வெப்பநிலை, மழை வீழ்ச்சி.
113. இந்தியாவின் நான்கு பருவ காலங்கள் யாவை?
1. குளிர்காலம்: டிசம்பர் - பிப்ரவர்.
2. கோடை மார்ச் - மே –
3. தென்மேற்குப் பருவக் காற்று காலம்: ஜூன் - செப்டம்பர்.
4. வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம்: அக்டோபர் - நவம்பர்.
114. வடகிழக்குப் பருவக்காலத்தின் நன்மை தீமைகள் யாவை?
1. இப்பொழுது வங்காள விரிகுடாவில் காற்றின் அழுத்தம் குறைந்து சூறாவளிகள் தோன்றும். இவை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையிலுள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களின் கடற்கரைப் பகுதிக்கு அதிக மழையைக் கொடுக்கின்றன.
2. இவை உயிருக்கும், உடமைக்கும் சேதத்தையும் விளை விப்பவை.
115. இந்தியாவின் மிக வெப்பமான மாதம் எது?
மே மாதம்.
116. இந்தியாவின் கோடை வெப்பம் தென்னிந்தியாவின் கோடைவெப்பத்தை விட அதிகம் ஏன்?
1. வட இந்தியா பெரிய நிலப்பரப்பான ஆசியக் கண்டத்துடன் இணைந்துள்ளது.
2. கடற்கரையிலிருந்து வெகுதொலையில் உள்ளது.
117. பம்பாயைவிட நாகபுரி அதிக வெப்பமாக உள்ளது. ஏன்?
நாகபுரி உள்நாட்டிலும், பம்பாய் கடற்கரையிலும் உளளன.
118. இந்தியாவின் குறிப்பிடத்தக்க மழைப் பிரதேசங்கள் யாவை?
1. கனத்த மழை பெறும் பகுதி: 200 செ.மீ.க்கு மேல் மழை. இதில் மேற்குக் கடற்கரைப்பிரதேசம், வங்காளம், அஸ்ஸாம், கிழக்கு இமயமலை பகுதி ஆகியவை
2. அதிக மழை பெறும் பகுதி. 100 - 200 செ. மீ. மழை. கங்கைச் சமவெளி, வங்காளம், பீகார், ஒரிசா, சோட்டா நாகபுரி ஆகியவை மழை பெறுகின்றன.
3. மித மழைப் பகுதி: 50 -100 செ.மீ மழை. தக்கான தெற்கு, தென்மேற்குப் பாகங்கள், மைய இந்தியப் பீட பூமி, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்குப்பகுதி ஆகியவை மழை பெறுதல்.
4. குறைந்த மழைப் பகுதி: ஆண்டிற்கு 50 செ.மீ. க்கு குறைவான மழை, பஞ்சாப், இராஜஸ்தான்.
5. குளிர்கால மழைப்பகுதி: 50 செ.மீ. 100 செ.மீ.வரை வடகிழக்குப் பருவக் காற்றால் மழையை சோழ மண்டலக் கடற்கரை பெறுகிறது.
5. பொருள் வளம்
119. முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்பொழுது தொடங்கிற்று?
1951 இல் தொடங்கிற்று.
120. நம் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கால வாரியாகக் கூறுக.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951 - 1956
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1956 - 1961
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் 1961 - 1966
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் 1969 - 1974
ஐந்தாம் ஐந்தான்டுத் திட்டம் 1974 – 1979
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் 1980 - 1981, 1984 – 1985
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் 1985 - 1990
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1992 - 1997
ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் 1997 - 2002
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் 2002 - 2005
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - திட்டம், ஐந்தாண்டுத், இந்தியாவின், பகுதி, ஆகியவை, மழைப், யாவை, அதிக, நாகபுரி