புவியியல் :: இந்தியா
101. மீன்களின் உணவுச் சிறப்பென்ன?
சிறந்த புரதம் உள்ளவை.
102. மீன் பிடிப்பின் வகைகள் யாவை?
1. ஆழ்கடல் மீன் பிடிப்பு
2. கடலோர மீன் பிடிப்பு
3. உள்நாட்டு மீன் பிடிப்பு.
103. ஆழ்கடல் மீன்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது?
கொங்கணக் கடற்கரை, கேரளக் கடற்கரை, சோழ மண்டலக் கடற்கரை.
104. கடலோர மீன் பிடிப்பு எவ்வாறு நடைபெறுகிறது?
கட்டுமரங்கள் மூலமும், விசைப்படகுகள் மூலமும் மீனவர்களால் நடைபெறுவது.
105. உள்நாட்டு மீன் பிடிப்பு என்பதென்ன?
ஆறுகள், வாய்க்கால், ஏரி முதலியவற்றில் மீன் பிடித்தல்.
106. இந்தியாவில் மீன் பிடிக்கும் தொழில் கணிசமாக வளராததற்குக் காரணங்கள் என்ன?
1. மீன் பிடிக்கும் தொழிலில் நவீன முறையில் கையாளப் படுவதில்லை.
2. குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெரிய கப்பல்கள் போதிய அளவு இல்லை.
3. போதிய மீன் பிடிதுறைகள் இல்லை.
4. விற்பனைக்கு ஏற்ற சந்தைகள் போதுமான அளவு இல்லை.
107. பெருங்கடல்கள் இயற்கை வளம் நிறைந்தவையா?
ஆம். நிறைந்தவையே. இவற்றின் அடியில் உள்ள கனிமங்கள், வளி, உலோகங்கள் ஆகியவை இயற்கை வளங்களே. மீன்களும் இயற்கை வளங்களே. கடல் நீரை நன்னீராக்கலாம். கடல் அலைகள் ஏற்றவற்றங்கள் ஆகியவையும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்களே.
108. உணவுப் பயிர்கள் என்பவை யாவை?
கூலவகைப் பயிர்கள் உணவுப் பயிர்கள் ஆகும். எ-டு நெல், கோதுமை.
109. முதன்மை உணவுகள் யாவை?
நாம் அடிக்கடி உண்ணும் உணவு. நாம் அரிசியை அதிகம் உண்கிறோம். வடக்கே இருப்பவர்கள் கோதுமையை உண்கிறார்கள். இவை இரண்டும் முதன்மை உணவுகள் ஆகும்.
110. உலகில் எத்தனை வகை நெல்கள் உள்ளன?
70,000 வகை நெல்கள் உள்ளன.
4. காலநிலை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்தியா - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மீன், பிடிப்பு, வளங்களே, பயிர்கள், இயற்கை, கடற்கரை, யாவை, இல்லை