புவியியல் :: புவியமைப்பியல்
41. புவி அமைப்பியலில் பயன்படும் கருவிகள் யாவை?
1. ஈர்ப்புமானி
2. ஈர்ப்பு ஊசல்
3. சாய்மானி
4. காந்தமானி
5. நிலநடுக்கமானி
6. பாறை வரைவி
7. மின்னணு நுண்ணோக்கி
8. நிறை நிறமாலைமானி
9. கணிப்பொறி
42. புவி அமைப்பியல் தொடர்புள்ள அடிப்படை அறிவியல் யாவை?
1. கணக்கு - புள்ளி இயல் முறை
2. வேதியியல் - பாறைகளின் இயைபை அறிதல்
3. உயிரியல் - தொல்லுயிர்களான தாவரங்களையும் விலங்குகளையும் அறியப் பயன்படுதல்
4. இயற்பியல் - புவியைப் பாதிக்கும் பல இயற்கை ஆற்றல்களையும் அவற்றைப் புவி சமாளிப்பதையும் விளக்குவது.
43. வானவியலோடு அதற்குள்ள தொடர்பு யாது?
வானியல் ஆராய்ச்சி முடிவுகள் புவி விண்ணகத்தில் எவ்வாறு பொருந்தியமைகின்றன என்பதை விளக்குகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவியமைப்பியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - புவி