புவியியல் :: புவியமைப்பியல்
31. தொல்பொருள் காலக் கணிப்பு நுணுக்கத்தைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
வில்லார் பிராங்க் லிபி.1960இல் நோபல் பரிசு பெற்றார்.
32. காலக்கணிப்பு நுணுக்கங்கள் என்றால் என்ன?
தொல்லுயிர்ப் படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள்.
33. இவற்றின் வகைகள் யாவை?
1. சார்புக் காலமறி நுணுக்கம்
2. சார்பிலாக் காலமறி நுணுக்கம்
34. சார்புக் காலமறி நுணுக்கம் என்றால் என்ன?
ஏனைய மாதிரிகளோடு ஒப்பிட்டு, ஒரு மாதிரியின் வயதை உறுதி செய்வது.
35. சார்பிலாக் காலமறி நுணுக்கம் என்றால் என்ன?
நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு, தொல் பொருளின் வயதை உறுதி செய்வது.
36. மூன்று புவியமைப்பியல் கொள்கைகள் யாவை?
1. கண்ட நகர்வுக் கொள்கை
2. கடல் தரை பரவுகொள்கை
3. தட்டமைப்பியல் கொள்கை
37. கண்ட நகர்வுக் கொள்கை என்றால் என்ன?
1912இல் ஆல்பிரட் வேக்கனர் இக் கொள்கையை முன்மொழிந்தார். புவிக்கண்டங்கள் தனித்தொகுதியாகத் தோன்றிய பின், அவை ஒன்றுக்கு மற்றொன்று சார்பாக நகர்ந்து வருகின்றன என்பது இக்கொள்கை. இவர் ஒரு கனிமவியலார்.
38. கடல் தரை பரவுகொள்கை என்றால் என்ன?
1960களில் புவி அமைப்பு இயலார் ஹேரி எச். ஹெஸ், கடலியலார் இராபர்ட் எஸ். டயட்ஸ் ஆகிய இருவரும் இக் கொள்கையை உருவாக்கினர். இது தொல் புவிக் காந்தத்தை விளக்குவது; தட்டமைப்பியல் உருவாக வழி வகுத்தது.
39. தட்டமைப்பியல் கொள்கை என்றால் என்ன?
புவி ஒட்டில் நகரும் தட்டுகள் உள்ளன. இவை மலைத் தொடர்களின் எரிமலை இயக்கத்தால் உண்டாகின்றன. கண்டங்களின் விளிம்புகளிலுள்ள பெரும் கடல் தரை அகழிகளால் அழிபவை.
40. இக்கொள்கையின் சிறப்பு யாது?
1. புவி அமைப்பியல் சிந்தனையில் ஒரு புரட்சியை உண்டாக்கி, புவி அமைப்பியல் ஆராய்ச்சியை ஊக்குவித்தது.
2. இக்கொள்கை கடல் புவியமைப்பியலில் உயர் ஆராய்ச்சி நடைபெற வாய்ப்பளித்துள்ளது. கடல் வடி நிலங்களை ஆராயவும் வழிவகுத்துள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவியமைப்பியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கடல், புவி, கொள்கை, காலமறி, நுணுக்கம், வயதை, உறுதி, தட்டமைப்பியல்