புவியியல் :: புவியமைப்பியல்
21. நிக்கோலிஸ் அம்ரேசி தம் குழுவினருடன் செய்த அரும் பணி யாது?
கி.மு. 10 முதல் 1699 வரை ஏற்பட்ட 3000 நில நடுக்கங்களை அடையாளங் கண்டறிந்தனர். இவற்றில் 2200 பெரும் நில நடுக்கங்கள்.
22. குவியர் கொள்கை யாது? அதன் விளைவு யாது?
இவர் கொள்கை மாமாற்றக் கொள்கை. இது வெர்னர் கொள்கையையும், ஹட்டன் கொள்கையையும் பின்னுக்குத் தள்ளியது. இவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவர் ஆற்றல் வாய்ந்த அறிவியலார்.
23. புவி அமைப்பியலின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
1. இயற்கைப் புவி அமைப்பியல்.
2. வரலாற்றுப் புவி அமைப்பியல்.
24. இயற்கைப் புவி அமைப்பியல் என்றால் என்ன?
புவியின் இயல்பான அமைப்பை ஆராய்வது.
25. இதில் அடங்கும் பிரிவுகள் யாவை?
1. கனிம இயல் - தாதுப் பொருள்களை ஆராய்வது.
2. பாறை இயல் - பாறைகளை ஆராய்வது.
3. தட்டு அமைப்பியல் - புவி உண்டானதை வரலாற்று முறையில் ஆராய்வது.
4. புவி உருவியல் நிலத் தோற்றங்களை ஆராய்வது.
5. பொருளியல் புவி அமைப்பியல் - புவி அமைப்பு முறைகள், பொருள்கள் ஆகியவற்றை ஆராய்வது.
6. நிலநடுக்கவியல் - நில அதிர்ச்சிகளை ஆராய்வது.
7. எரிமலை இயல் - எரிமலைகளை ஆராய்வது.
8. கடலியல் - பெருங்கடல்களையும் துணைக் கடல்களையும் ஆராய்வது.
26. வரலாற்றுப் புவி அமைப்பியல் என்றால் என்ன?
புவி உருவான வகையையும் அதிலுள்ள மக்களையும் ஆராய்வது.
27. இதிலுள்ள பிரிவுகள் யாவை?
1. அடுக்கு வரைவியல் - பாறை அடுக்குகளை ஆராய்வது.
2. தொல்புவி அமைப்பு இயல் - தொல்கால தாவரங்களையும் விலங்குகளையும் ஆராய்வது.
3. புவிக்காலவியல் - காலத்தை ஆராய்தல்.
4. தொல்காலநிலை இயல் - தொல் தட்ப வெப்ப நிலைகளை ஆராய்வது.
5. தொல் காந்தவியல் - பழம்பாறைகளின் காந்தப் புலங்களை ஆராய்வது.
6. தொல் புவி அமைப்பியல் - இயற்கைப் புவி இயல்.
7. நுண்தொல்லுயிரி இயல் - சிறிய தொல் வடிவங்களை ஆராய்வது.
28. புவிக் கடிகாரம் எவ்வாறு உருவாயிற்று?
கதிரியக்கப் பொருள்கள், அவற்றின் அழிவு ஆகியவை நீண்ட காலம் எதிர்பார்த்து கொண்டிருந்த புவிக் கடிகாரம் உருவாக வாய்ப்பளித்தன.
29. புவிக்கடிகாரம் என்றால் என்ன?
புவியின் வயதை உறுதி செய்யும் கடிகாரம். இதன் படி புவியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள்.
30. கரிக்காலக் கணிப்பு என்றால் என்ன?
தொல் பொருள்களின் வயதை கரி-14 அடிப்படையில் உறுதி செய்யும் முறை. கரி-14 என்பது ஒரு சுவடு அறியும் தனிமம் ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவியமைப்பியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆராய்வது, புவி, இயல், அமைப்பியல், தொல், என்றால், என்ன, கொள்கை, யாவை, கடிகாரம், இவர், புவியின், இயற்கைப், பிரிவுகள், யாது