புவியியல் :: புவியமைப்பியல்
11. ஹட்டன் கொள்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள் யாவை?
புவியில் ஏற்பட்ட அமைப்பு மாற்றங்கள் சீரானவையும் சுழற்சியுள்ளவையும் ஆகும். இவை நீண்டகால எல்லையில் ஏற்பட்டவை. இவை அடிப்படையில் உண்மையானவை.
12. ஹட்டன் கொள்கையில் ஏற்கத்தகாத கருத்துகள் யாவை?
இம்மாற்றங்கள் ஏற்பட்டதற்குரிய நுட்பத்தை விளக்குவது ஏற்றுக் கொள்வதாக இல்லை.
13. புவியமைப்பியலில் முறையான ஆராய்ச்சியைத் தொடங்கியவர் யார்?
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பஃபன் ஆவார். இவர் புவியமைப்பியலை விரிவாக ஆராய்ந்தவர். 44 தொகுதிகள் கொண்ட இயற்கை வரலாறு என்னும் நூல் எழுதியவர். அதில் இவர் புவியின் பொது வரலாறும் கூறுகின்றார். இவர் கருத்துகள் முழுதும் சரியில்லை என்றாலும் புவியமைப்பியல் சிந்தனைகள் மேலும் உருவாகத் தூண்டின. இவர் கூறிய கருத்துகளில் இரண்டு இங்குக் கருதத்தக்கது.
1. கதிரவனுடன் வால்மீன் மோதிய பொழுது, தெறித்து விழுந்த துண்டே புவியாக மாறியது.
2. புவியின் வயது 100,000 ஆண்டுகள்.
14. தற்காலப் புவியமைப்பியலுக்கு வித்திட்டவர் யார்?
ஸ்காட் புவி அமைப்பியலார் சார்லஸ் லையல் (1797 - 1875). புவியை அறியவும் அதைப் பற்றிய மனித வரலாற்றை அறியவும் அவர் கூறிய கருத்துகள் புவியமைப்பியலாகும். உயிரியலாருக்கும் பெரிதும் துணை புரிந்தன. இவர் ஒருசீர் கொள்கையை உருவாக்கியவர். இவர் 1830 இல் புவியமைப்பியலின் நெறிமுறைகள் என்னும் நூலை பெளியிட்டார்.
15. 18ஆம் நூற்றாண்டின் சிறந்த புவியமைப்பியலார் யார்?
ஆப்ரகாம் காட்லாப் வெர்னர் (1750 - 1817). இவர் முன்மொழிந்த கொள்கை நீர்வழிக் கொள்கை (Neptunism) கடல் நீரிலிருந்த பாறைகளிலிருந்து புவி தோன்றின என்றார். இவர் புவியமைப்பியலை ஒர் அறிவியலாகக் கருதினார். இவர் சிறந்த ஜெர்மன் புவி அமைப்பியலார்.
16. 18 ஆம் நூற்றாண்டில் வாதிடப்பட்ட இரு கொள்கைகள் யாவை?
1. நீர் வழிக் கொள்கை - வெர்னர்.
2. பாறைவழிக் கொள்கை - ஹட்டன்.
17. மாமாற்றப் புவி அமைப்பியல் என்றால் என்ன?
புவியமைப்பியலில் இது ஒரு விசைக் கொள்கை. புவியின் அமைப்பு இயல்புகள் மாமாற்ற நிகழ்ச்சிகள் ஆகும். இவை வெள்ளங்கள், நிலநடுக்கங்கள், எரிமலைகள் ஆகியவை ஆகும். இக்கொள்கையை வகுத்தவர் குவியர்.
18. ஒருசீர் புவி அமைப்பியல் என்றால் என்ன?
புவி அமைப்பியலில் இது ஒரு வகைக் கொள்கை. புவியின் அமைப்பு இயல்புகள் இயற்கை ஆற்றல்களால் ஏற்படுபவை. இவை ஒரே சீராகவும் மெதுவாகவும் நீண்ட காலங்கள் நடைபெறுபவை.
19. முறையான புவி அமைப்பியல் எப்பொழுது உருவாயிற்று?
18 ஆம் நூற்றாண்டில்.
20. தட்டு அமைப்பியல் கொள்கையை நன்கு விளக்கியவர் யார் ?
டேன் மெக்கன்சி, கேம்பிரிட்ஸ் பல்கலைக் கழகம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவியமைப்பியல் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இவர், புவி, கொள்கை, புவியின், அமைப்பியல், கருத்துகள், யார், யாவை, அமைப்பு, ஆகும், ஹட்டன், நூற்றாண்டில்