புவியியல் :: புவி அமைப்பு
21. கற்கோளத்தில் அடங்குபவை யாவை?
பாறைகள், கற்கள், மண்.
22. நீர்க்கோளத்தில் அடங்குபவை யாவை?
நீர்ப்பரப்பு அனைத்தும் நீர்க்கோளத்தில் அடங்கும்.
23. புவி பெற்றிருக்கும் பண்புகள் யாவை?
வடிவம், அளவு, பரப்பு.
24. புவி ஒட்டின் மிக உயரமான இடம் எது?
இமயமலை.
25. புவி ஒட்டின் மிக ஆழமான இடம் எது?
மரியான அகழி
26. புவியின் மூன்று மண்டலங்கள் யாவை?
1. கற்கோளம்
2. நீர்க்கோளம்
3. காற்றுவெளி.
27. புவி ஒட்டிற்குரிய விசைகள் எவற்றால் உண்டாகின்றன?
புவிக்கு அடியில் உண்டாகும் வேதிமாற்றங்கள், கதிரியக்கம் ஆகியவற்றால் உண்டாகின்றன.
28. வெப்ப அடிப்படையில் புவி பிரிக்கப்பட்டிருக்கும் மண்டலங்கள் யாவை?
1. வெப்ப மண்டலம்
2. சீரான வெப்ப மண்டலம்
3. குளிர் மண்டலம்.
29. புவியின் இரண்டு இயக்கங்கள் யாவை?
1. சுற்றுதல் - புவி தன்னைத்தானே ஒரு சுற்று சுற்ற 24 மணி நேரம் ஆகிறது.
2. சுழலுதல் - கதிரவனைப் புவி ஒரு சுற்று சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. இவ்விரு இயக்கங்களும் ஏனயை எட்டுக் கோள்களுக்கும் உண்டு.
30. சமன விசைகள் என்றால் என்ன?
இவை தங்களுக்கு வேண்டிய ஆற்றலைக் கதிரவனிட மிருந்து பெறுகின்றன. எ-டு காற்று, நீர், நகரும் பனி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அமைப்பு - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - புவி, யாவை, மண்டலம், வெப்ப