புவியியல் :: புவி அமைப்பு
11. புவித் தோட்டின் தடிமன் என்ன?
கண்டங்களுக்கீழ் 30 -40 கி.மி. கடலுக்குக் கீழ் அதன் தடிமன் 6-8 கி.மீ.
12. புவியின் காந்தப் புலங்கள் எவ்வளவு தொலைவு பரவி யுள்ளன?
வான வெளியில் பல ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு உள்ளன.
13. புவியின் மற்றொரு பக்கத்திற்கு நாம் குகை அமைக்க முடியுமா?
முடியாது. புவியின் அக உள்ளகம் மித வெப்பமாக உள்ளது.
14. புவியில் தோண்டப்பட்ட துளையின் அதிக ஆழம் எவ்வளவு?
12 கி. மீ.
15. புவிக்குக் காந்த ஆற்றல் உண்டா?
உண்டு. புவி ஒரு பெரிய காந்தம்.
16. இதை நாம் எவ்வாறு அறியலாம்?
காந்த ஊசி வடக்கு தெற்கு நோக்கியே நிற்கும்.
17. தற்பொழுது உள்ளது போலவே புவி இருந்ததா?
இல்லை. கடின வெளிப்புற அடுக்கு பெரிய துண்டுகளாக உடைந்தன. இவை தட்டுகள் எனப்படும். இவை பல மில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டுள்ளன. கண்டங்களையும் நகருமாறு செய்துள்ளன.
18. புவியின் உள்ளே இருப்பது என்ன?
புவியில் 4 அடுக்குகள் உள்ளன. வெளிப்புற அடுக்கு தோடு. இதற்கு அடுத்துள்ளது மூடகம். இது தன் உச்சியில் கெட்டியாகவும் அடியில் பாறைகள் உருகக் கூடிய அளவுக்கு வெப்பமாகவும் உள்ளது.அடுத்துள்ளது வெளி உள்ளகம். இது வெப்ப நீர்ம உலோகத்தாலானது. மையத்திலுள்ளது அக உள்ளகம். இது கெட்டி உலோகத்தாலானது.
19. புவியின் எடை என்ன?
6,000,000,000,000,000,000,000 டன்கள்.
20. புவியின் அக உள்ளகத்தின் வெப்பநிலை என்ன?
5700° செ.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அமைப்பு - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - புவியின், என்ன, உள்ளது, உள்ளகம்