புவியியல் :: அணைக்கட்டும் பாசனமும்
31. தமிழ்நாட்டில் எம்மாவட்டங்களில் ஏரிப்பாசனம் நடைபெறுகிறது?
செங்கல்பட்டு, வடார்க்காடு, தென்னார்க்காடு, புதுக் கோட்டை இராமநாதபுரம்.
32. தமிழ்நாட்டிலுள்ள இரு ஏரிகளைக் கூறு.
மதுராந்தகம் ஏரி, வீராணம் ஏரி.
33. தஞ்சையிலுள்ள பெரிய கால்வாய் எது?
கல்லணைக் கால்வாய். கரிகாலன் கட்டியது.
34. கிணற்றுப் பாசனத்தில் முதலிடம் பெறும் மாநிலம் எது?
பஞ்சாப்.
35. தமிழ்நாட்டில் கிணற்றுப்பாசனம், நீர்ப்பாசனம் எங்கெங்கு நடைபெறுகிறது?
கோயம்புத்தூர், சேலம், மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது.
36. குழாய்க்கிணறுகள் என்பவை யாவை?
நிலத்தடி நீரை குழாய்கள் மூலம் கொண்டு வரும் கிணறுகள் 20 அடியிலிருந்து 200 அடி வரை பர்சனத்திற்கு நீர் கிடைக்கும். தமிழ்நாடு, உத்திர பிரதேசம், ஆந்திரா முதலிய மாநிலங்களில் இப்பாசனம் நன்கு நடைபெறுகிறது. குழாய்க் கிணறு உள்ள இடங்களில் மூன்று போகம் சாகபடி செய்யலாம்.
37. இந்தியாவிலுள்ள இருவகைக் கால்வாய்கள் யாவை?
1. வெள்ளப்பெருக்குக் கால்வாய்கள் - பஞ்சாப் மாநிலத்தில் சட்லெஜ் ஆற்றுப் பகுதியில் இத்தகைய கால்வாய்கள் அதிகம்.
2. வற்றாக் கால்வாய்கள் - வட இந்திய டெல்டா பகுதிகளில் உள்ளன. பஞ்சாபிலும் உ.பி.யிலும் இவை அதிகம்.
38. பெரும் நீர்ப்பாசனத் திட்டத்தின் எல்லை என்ன?
பயிர் செய்யக்கூடிய பர்ப்பு 10,000 ஹெக்டேர்கள்
39. நடுநிலை நீர்ப்பாசனத்திட்டத்தின் எல்லை என்ன?
பயிர் செய்யக் கூடிய பரப்பு 2,000 ஹெக்டேர்.
40. எட்டாவது ஐந்தாண்டுத்திட்ட முடிவில் இருந்த பெரும் நீர்ப் பாசனத் திட்டங்களும் நடுநிலைப் பாசனத் திட்டங்களும் எத்தனை?
பெரும் நீர்ப் பாசனத் திட்டம் - 162.
நடுநிலை நீர்ப் பாசனத் திட்டம் 240.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணைக்கட்டும் பாசனமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நடைபெறுகிறது, கால்வாய்கள், பாசனத், பெரும், நீர்ப்