புவியியல் :: அணைக்கட்டும் பாசனமும்
![Dam and Irrigation](images/dam_and_irrigation.jpg)
21. அனைத்துலகக் கடல் உலக கண்காட்சி எங்கு எப்பொழுது நடந்தது?
2001 பிப்ரவரி 10 இல் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
22. பொங்குகிணறுகள் தமிழ்நாட்டில் எங்குள்ளன?
நெய்வேலியில்.
23. பொங்குகிணறுகளின் பயன் யாது?
இவை குடிப்பதற்கும் பாசனத்துக்குரிய நீரை அளிப்பவை.
24. நீர் வீழ்ச்சிகள் எவ்வாறு உண்டாகின்றன?
பாறையின் வழியாகச் செல்லும்பொழுது இவை தோன்றுகின்றன. மென்மையான பாறையை ஆறு அரிக்க வல்லது. இதனால் ஒரு படி உண்டாகிறது. இது படிப்படியாக ஆழமாவதால், அதில் ஆறு சென்று நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எ-டு குற்றால அருவிகள், சிவ சமுத்திர அருவிகள்.
25. நீர்வீழ்ச்சியின் பயன்கள் யாவை?
1. குடிப்பதற்கும் பாசனத்திற்கும் நீர் அளிக்கின்றன.
2. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூலமாக உள்ளன.
3. சுற்றுலா மையம்.
26. மூவகை நீர்ப்பாசன முறைகள் யாவை?
1. கால்வாய்ப் பாசனம்
2. கிணற்றுப்பாசனம்
3. ஏரிப்பாசனம்.
27. கால்வாய்ப் பாசனம் மிக இன்றியமையாதது. ஏன்?
1. கால்வாய்களை அமைப்பது எளிது.
2. செலவு குறைவு
3. சீராக நீர் கிடைக்கும்
4. மொத்தப் பாசனப் பரப்பில் 41% கால்வாய்ப் பாசனமாகும்.
28. கால்வாய்ப் பாசனம் எங்கெங்கு நடைபெறுகிறது?
வட இந்தியச் சமவெளிகள், தக்கான பீடபூமியிலுள்ள அகன்ற ஆற்றுப்பள்ளத்தாக்குகள், கடற்கரைச் சமவெளிகள்.
29. ஏரிப்பாசனம் எங்கு முக்கியமானது?
மழை குறைவாக இருப்பதால், தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் முக்கியமாகும்.
30. ஏரிப்பாசனமுள்ள மாநிலங்கள் யாவை?
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், ஒரிசா.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணைக்கட்டும் பாசனமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கால்வாய்ப், ஏரிப்பாசனம், பாசனம், நீர், யாவை