புவியியல் :: அணைக்கட்டும் பாசனமும்
11. நிலத்தடி நீர் என்றால் என்ன?
பாறைக்கு அடியிலுள்ள நீர் மண்டலம் நிலத்தடிநீர். இதன் மேல் மட்டம் நிலநீர் மட்டம்.
12. ஊற்றுகள் என்பவை யாவை?
நிலத்தடி நீர் மட்டம் நில மட்டத்தை விட உயரும் பொழுது, புவியின் மேற்பரப்பில் நீர் கசியும். இக்கசிவே ஊற்றுகள் ஆகும்.
13. பொங்குகிணறுகள் என்றால் என்ன?
நீர்ப்புகாப் பாறைகளுக்கிடையே நிலத்தடி நீர் தேங்கி இருக்கும் கொப்பரையே பொங்கு கிணறு அல்லது ஊற்று. இதிலிருந்து நீர் தானாக மேல் வரும்.
14. ஏரிகள் எவ்வாறு தோன்றுகின்றன?
உலகின் பெரும்பாலான ஏரிகள் பணியாறுகள் உள்ள இடத்தில் உள்ளன. சில ஏரிகள் ஆழமான பிளவுப் பள்ளத் தாக்குகளில் உள்ளன. எ-டு ஆப்பிரிக்க டங்கன்யி.கா. ஓர் ஆறு தன் போக்கை மாற்றும் பொழுது உண்டாகலாம் அல்லது எரிமலை வாய்களில் உண்டாகலாம்.
15. உலகின் ஆழமான ஏரிகள் யாவை?
1. பெய்கால் - உருசியா
2. டன்கானியாகா - ஆப்பிரிக்கா.
3. காஸ்பியன் கடல் - ஆசியா மற்றும் ஐரோப்பா
4. மாலாவி - ஆப்பிரிக்கா
5. அசிக் - கிர்சிஸ்தான்
16. இவற்றில் மிக ஆழமானது எது? ஆழங் குறைந்தது எது?
அதிக ஆழமுள்ளது பெய்கால், ஆழம் குறைந்தது அசிக்.
17. உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?
ஏரி சுப்பீரியர். அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளிலும் 82,000 சதுர கி.மீ. பரப்பளவுக்குள்ளது.
18. சீனாவில் மஞ்சள் ஏரி செய்யும் அழிவு வேலை யாது?
ஒவ்வொராண்டும் 2000 மில்லியன் டன்கள் அளவுக்கு மண்ணைப் பள்ளதாக்கு நோக்கி அடித்துச் செல்கிறது.
19. உலகிள்ள ஆழமான ஏரிகள் எத்தனை?
பத்து.
20. இவற்றில் மிக ஆழமான ஏரி எது?
உருசியாவிலுள்ள பெய்கால் ஏரி. ஆழம் 1940 மீ.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணைக்கட்டும் பாசனமும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நீர், ஏரிகள், ஆழமான, பெய்கால், உலகின், நிலத்தடி, மட்டம்