புவியியல் :: காலநிலையும் வானிலையும்
31. தட்ப வெப்பநிலை மூலங்கள் யாவை?
வெப்பம், காற்றழுத்தம், ஈரம் வடிதல், ஈரநிலை, காற்று.
32. நான்கு வகைத் தட்ப வெப்பநிலைகள் யாவை?
1. முனைத் தட்ப வெப்பநிலை வடமுனை, தென்முனை.
2. வெப்பமண்டலத் தட்பவெப்ப நிலை.
3. கீழ்வெப்பமண்டலத் தட்ப வெப்பநலை.
4. சீரான தட்ப வெப்ப நிலை.
பாலைவனங்களுக்கும் மலைகளுக்கும் தனி வகை வெப்ப நிலை உண்டு.
33. தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
1. அட்சாம்சம்.
2. கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு .
3. கடல்மட்டத்திலிருந்து உயரம்.
4. மலைத்தொடர் அமைந்துள்ள திசையும் அதன் உயரமும்,
5. வீசும் காற்றுகள்.
6. கடல் நீரோட்டங்கள்.
34. தட்பவெப்ப நிலை தாவர வளர்ச்சியைப் பாதிக்குமா?
பாதிக்கும். ஒவ்வொரு தட்பவெப்ப நிலையில் ஒவ்வொரு வகைத் தாவரம் வாழும்.
1. மழைக்காடுகள் - நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள வெப்ப மற்றும் ஈரப் பகுதிகளில் வளர்பவை.
2. ஊசியிலைக் காடுகள் - வட பகுதியில் குளிர் பகுதி களில் வாழ்பவை. மேலும் வடக்கே செல்லப் பாசிகளும் சிறிய பூச்சிகளுமே வாழ்பவை.
3. பனிச்சமவெளித் தாவரம் - முனைப்பகுதி.
4. சீரான தட்ப வெப்ப நிலைக் காடுகள்.
5. வெப்ப மண்டல புல்நிலம்.
6. பாலை நிலம் - வறண்ட தட்ப வெப்ப நிலை.
35. பருவங்கள் ஏற்படக் காரணம் என்ன?
கதிரவனைச் சுற்றிப் புவி செல்லும்பொழுது, அதன் வேறுபட்ட பகுதிகள் ஒரு நேரத்தில் சில மாதங்கள் கதிரவனை நோக்கிச் சாயும். கதிரவனை நோக்கிச் சாயும் பகுதி கோடை சாயாத பகுதி மாரி.
36. சைபீரியாவில் நிலவும் வெப்ப நிலை என்ன?
ஓராண்டில் 70° செ. முதல் 37° செ வரை உள்ளது.
37. பருவநிலை மாறுபடுவதற்குத் தகுந்த எடுத்துக்காட்டுகள் தருக.
ஐரோப்பாவில் கோடையாய் இருக்கும்பொழுது ஆஸ்திரேலியாவில் மாரிக்காலமாக இருக்கும்.
38. வானிலை என்றால் என்ன?
காற்றுவெளி நிலைமை, கதிரவன் ஒளி, வெப்பநிலை, மப்புநிலை, ஈரநிலை, காற்றழுத்தம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது.
39. வானிலை முன்னறிவிப்பு என்றால் என்ன?
அன்றாடம் வானிலை நிலையம் திரட்டும் வானிலைச் செய்திகளின் அடிப்படையில் அடுத்த நாள் வானிலை எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டித் தெரிவித்தல்.
40. இவை எவ்வாறு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகின்றன?
வானிலை நிலாக்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலநிலையும் வானிலையும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வெப்ப, தட்ப, நிலை, வானிலை, தட்பவெப்ப, என்ன, வெப்பநிலை, யாவை, பகுதி