புவியியல் :: காலநிலையும் வானிலையும்
21. ஒசோன் அடுக்கின் நன்மை என்ன?
கதிரவனிடமிருந்து வரும் தீங்குதரும் புற ஊதாக் கதிர்வீச்சை உறிஞ்சிப் புவிக்குச் செல்லாதவாறு தடுக்கிறது. இதனால் புவி உயிர்கள் உயிர்வாழ ஏதுவாகிறது.
22. காற்றுவெளியழுத்தம் என்றால் என்ன?
கடல்மட்டத்தில் 760 மி.மீ. பாதரச கம்பத்தைக் காற்று வெளி தாங்கும். உயரம் குறையக் குறைய இது அதிகமாகும். அதிகமாக அதிகமாகக் குறையும்.
23. கடல் மட்டத்தில் காற்றுவெளி அழுத்தத்திட்ட மதிப்பு என்ன?
எஸ்ஐ அலகுகளில் 101325 பாஸ்கல்கள்.
24. உயிர்வளியும் நைட்ரஜன் எந்த அளவுக்கு காற்று வெளியில் உள்ளன?
உயிர்வளி 20%. நைட்ரஜன் 78%
25. காற்றுவெளி நிலைத்திருப்பதற்குக் காரணம் என்ன?
ஈர்ப்பாற்றல் காற்றுவெளி வளிகளைப் புவிநோக்கி இழுப்பதால் காற்றுவெளி நிலைத்துள்ளது.
26. காற்றுக்கு எடை உண்டா?
உண்டு. புவியைச் சூழ்ந்துள்ள காற்றின் எடை 5,200 மில்லியன் மில்லியன் டன்கள்.
27. உலக வானிலை முழுதும் எங்கு நடைபெறுகிறது?
காற்றுவெளியின் கீழடுக்கில் நடைபெறுகிறது. இங்குத் தான் கதிரவன் வெப்பம் காற்றை உயரவும் குளிரவும் செய்கிறது. காற்றியக்கம் உயர் அழுத்தத்தையும் தாழ்வழுத்தத்தையும் காற்றுகளையும் உண்டாக்குகிறது.
28. அலைமுகம் என்றால் என்ன?
கதகதப்பான காற்றுத் தொகுதி, குளிர் காற்றுத் தொகுதி ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள எல்லை. இங்குத் தான் பெரும்பான்மையான வானிலை மாற்றங்கள் நடைபெறுகின்றன.
29. காற்றுத்தொகுதி என்றால் என்ன?
ஒரே இடத்தில் நீண்டநேரம் பெருமளவு காற்று தங்குமானால், அது காற்றுத் தொகுதியை உண்டாக்கும். வெப்பநிலைக்கு ஏற்றவாறு இத்தொகுதிகள் கதகதப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். நகரத் தொடங்கும் பொழுது, வானிலையில் இவை மாற்றங்களை உண்டாக்குபவை.
30. தட்ப வெப்பநிலை என்றால் என்ன?
வெப்பநிலை, ஈரநிலை முதலியவற்றைப் பொறுத்தவரை ஒரிடத்தின் அல்லது ஒரு நாட்டின் பருவ நிலை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலநிலையும் வானிலையும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, காற்றுவெளி, என்றால், காற்றுத், காற்று