புவியியல் :: காலநிலையும் வானிலையும்
11. வாணிபக் காற்று என்றால் என்ன?
முதன்மையாக இது கடல் காற்றே. வட அரைத் திரளை யில் வடகிழக்கிலிருந்து நிலநடுக்கோடு நோக்கி வீசுவது. அதே போல தெற்கு அரைத் திரளையில் தென் கிழக்கி லிருந்து நிலநடுக்கோடு நோக்கி வீசுவது. வீசுவது குறுக்குக் கோடுகள் 0°, 30° ஆகிய இரண்டிற்கும் இடையில் இருக்கும்.
12. வாணிபக் காற்று வீசும் நாடுகள் யாவை?
இந்தியா, பாகிஸ்தான், வங்கம், பர்மா, கிழக்கு ஆசியா.
13. நிலக்காற்று என்றால் என்ன?
நிலத்திலிருந்து கடல் நோக்கி வீசும் வெப்பக் காற்று. இது இரவில் நடைபெறும்.
14. கடற்காற்று என்றால் என்ன?
கடலிலிருந்து நிலம் நோக்கிப் பகலில் வீசும் குளிர் காற்று.
15. காற்று வெளி என்பது என்ன?
புவியைச் சூழ்ந்துள்ள வளியடுக்கு.
16. இதிலுள்ள வளிகள் யாவை?
உயிர்வளி, நைட்ரஜன், கரி இரு ஆக்சைடு, ஈலியம், கிரிப்டான். நீராவியும் உண்டு.
17. காற்றுவெளியிலுள்ள அடுக்குகள் யாவை?
1. கீழ்வெளி
2. மேல்வெளி
3. அடுக்குவெளி
4. அயனி வெளி
18. காற்றுவெளிக்கு உயிர்வளி எப்படி கிடைக்கிறது?
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவிடும் உயிர்வளி காற்று வெளியை அடைகிறது.
19. காற்றுவெளி மேலே செல்லச் செல்ல எப்படியுள்ளது?
மேலடுக்கில் குளிர்ச்சி உள்ளது. மீதி மூன்று அடுக்குகளில் கதகதப்புள்ளது.
20. ஒசோன் அடுக்கு என்பது என்ன?
இது அடுக்கு வெளியில் 15-30 கி.மீ. உயரத்தில் உள்ளது. இதில் ஒசோன் வளி உள்ளது. இது ஒரு வகை உயிர் வளியே.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காலநிலையும் வானிலையும் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காற்று, என்ன, உள்ளது, உயிர்வளி, யாவை, வீசுவது, என்றால், நோக்கி, வீசும்