வேதியியல் :: இயற்பியல் வேதியியல்

41. வினை என்றால் என்ன?
வேதிவினை. எ-டு. துருப்பிடித்தல்.
42. வினையாக்கிகள் என்றால் என்ன?
குறிப்பிட்ட வேதிவினைகளை உண்டாக்கும் பொருள்கள். வேதியியல் ஆய்வுகளில் பயன்படுபவை. எ-டு. குளோரின்.
43. வினைமிகுபுலம் என்றால் என்ன?
வினையூக்கியில் மேற்பரப்பில் வினைநிகழுமிடம்.
44. பக்கவினை என்றால் என்ன?
முதன்மை வினைபோலவே வரையறுக்கப்பட்ட அளவுக்கு நடைபெறும் வேதிவினை.
45. இருநிலை விரும்பிகள் என்றால் என்ன?
நீர் வெறுப்பன, நீர் விரும்புவன என்னும் மூலக்கூறுகள்.
46. ஈரியல்பு ஆக்சைடு என்றால் என்ன?
காடியாகவும் உப்பு மூலியாகவும் வினையாற்றும் ஆக்சைடு எ-டு. துத்தநாக ஆக்சைடு,
47. கருவன்கள் (நியுகினியான்கள்) என்றால் என்ன?
முன்னணுக்களுக்கும் அல்லணுக்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். எல்லா அணுக்கருக்களிலும் உள்ளவை.
48. கருவன் எண் (நியுகிளியான் எண்) என்றால் என்ன?
ஒர் அணுக்கருவிலுள்ள கருவன்களின் எண்ணிக்கை.
49. அயனிமுடமாதல் என்றால் என்ன?
ஒரு கரைசலிலுள்ள அயனியோடு அணைமம் (காம்ளக்ஸ்) தோன்றுவதால், அந்த அயனி தன் இயல்பான செயலை இழத்தல். அயனிமுடமாக்கிகள் தீங்கு நீக்கும் பொருள்கள்.
50. ஈந்தி (லிகண்ட்) என்றால் என்ன?
ஈதல் மூலக்கூறு. ஒரிணை மின்னணுககளை வழங்கி ஈதல் பிணைப்பை உண்டாக்கும் மூலக்கூறு அல்லது அயனி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்பியல் வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஆக்சைடு