வேதியியல் :: இயற்பியல் வேதியியல்
21. மின்னிணை என்றால் என்ன?
இரு அணுக்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் மின்னணுக்கள். இது ஒற்றை இணைப்பிணைப்பை உண்டாக்குவது.
22. பிரிகை, பிரிகை மாறிலி என்றால் என்ன?
ஒரு மூலக்கூறு இரு மூலக்கூறுகளாகிய அணுக்களா கவும் படிமூலிகளாகவும் பிரிதல். இவ்வினையின் நடுநிலை மாறி, பிரிகை மாறிலி எனப்படும்.
23. வீதமாறிலி என்றால் என்ன?
ஒப்பு வினைத்தகவு (K). ஒரு வேதிவினைக்குரிய வீத வெளிப்பாட்டின் வீதப் பொருத்த மாறிலி.
24. வினைவீதம் என்றால் என்ன?
ஓரலகு நேரத்தில் ஒரு வேதிவினையில் செலவழியும் வினைபடுபொருளின் அளவை.
25. மின்வேதி இணைமாற்று என்றால் என்ன?
ஒரு கூலும் மின்சாரத்தை மின்பகுளிக் கரைசல் வழியாகச் செலுத்தும்பொழுது, விடுபடும் தனிமத் தொகுதி. அல்லது தனிமக் கிராம்களின் எண்ணிக்கை அல்லது 1ஆம்பியர் மின்னோட்டத்தில் 1 வினாடியில் மின்னாற்பகுப்பு மூலம் வெளியேறும் உலோகத்தின் நிறை.
26. அணியமைவு (லேட்டெக்ஸ்) என்றால் என்ன?
புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத்திண்மத் திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ்.கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் அணியமைவை ஆராயலாம்.
27. அணி அமைவு ஆற்றல் (லேட்டெக்ஸ் எனர்ஜி) என்றால் என்ன?
குறிப்பிட்ட படிகத்தின் ஒரு மோல் அளவை உண்டாக்க முடிவற்ற தொலைவலிருந்து எதிர்மின்னேற்றமுள்ள அயனிகளை ஒரு சேரக்கொண்டு வரும்பொழுது விடுவிக்கப்படும் ஆற்றல். ஒரு வளியிலுள்ள அயனிகளுக்குச் சார்பான நிலையில் ஒரு திண்மப் பொருளின் நிலைப்புத்திறனின் அளவே இவ்வாற்றல்.
28. அயல்வேற்றுருக்கள் என்றால் என்ன?
கெட்டிப் பொருள்களின் வேறுபட்ட இயல்பு வடிவங்கள். எ-டு. கரியின் வேற்றுருக்கள் வைரம், கிராபைட்
29. வேற்றுருமை என்றால் என்ன?
இயற்பண்புகளில் மாறுபட்டுப் பல வடிவங்களில் இருக்கும் ஒரு தனிமம் தன் வேதிப்பண்புகளிலும் மூலஅமைப்பிலும் மாறாமல் இருக்கும் இயல்பு. புறவேற்றுமை என்றுங் கூறலாம். எ-டு. சாய்சதுரக் கந்தகம், ஊசி வடிவக்கந்தகம், களிக்கந்தகம்.
30. தொடுவேற்றுருமை என்றால் என்ன?
சில கூழ்மங்கள் பெற்றிருக்கும் பண்பு. குலுக்கும்பொழுது அவை நீர்மமாகும். குலுக்கல் நின்றபின், அவை மீண்டும் படியத் தொடங்கும். எ-டு வண்ணக்குழம்பு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இயற்பியல் வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, மாறிலி, பிரிகை