வேதியியல் :: கரிம வேதியியல்
![Organic Chemistry](images/organic_chemistry.jpg)
81. இனாசிடால் என்றால் என்ன?
ஒளி இயக்கமுள்ள வெண்ணிறப் படிகம். வைட்டமின் பி தொகுதியிலுள்ளது. விலங்குணவின் இன்றியமையாப் பகுதி.
82. சாயம் என்றால் என்ன?
தோல், துணி முதலியவற்றை நிறமாக்கும் பொருள். பெரும்பாலான சாயங்கள் தொகுப்புக் கரிமச்சாயங்கள்.
83. மாவே என்பது யாது? இதைத் தொகுத்தது யார்?
கரிமச் சாயங்களில் முதல் சாயம். இது 1856இல் அனிலைனிலிருந்து பெர்கின் என்பவரால் தொகுக்கப் பட்டது.
84. சாயத்தின் பலவகைகள் யாவை?
1. காடிச் சாயம்
2. காரச் சாயம்
3. தோய்சாயம்
4. நேரடிச் சாயம்
5. ஆசோ சாயம்
85. தொட்டிச் சாயங்கள் என்பவை யாவை?
இவை கரையாச் சாயங்கள். நீர்த்த காரத்தில் கரையும் வழிப்பொருள்களில் இவை சேர்ந்து முதலில் ஒடுக்கப் பெறும். இந்நிலைமையில் சில இழைகளில் ஏறும் (பருத்தி). கரைசல் சாயந்தோய்க்க வேண்டிய பொருளோடு சேர்க்கப்படும். கரையாச்சாயம் காற்றுவெளி ஆக்சிஜன் ஏற்றத்தால் இழைகளில் மீட்பாக்கம் பெறும்.
86. ஆசோ சாயங்கள் என்றால் என்ன?
வெடிவளிச் சாயங்கள். நைட்ரஜன் (வெடிவளி) இதன் கூட்டுப் பொருளில் உள்ளது. நிறம் மஞ்சள், சிவப்பு அல்லது செம்பழுப்பு.
87. காடிச் சாயங்கள் என்றால் என்ன?
கரிமக் காடிகளின் சோடிய உப்புகள். எ-டு ஈயோசின்.
88. இவற்றின் பயன் யாது?
பட்டு, கம்பளம் ஆகியவற்றைச் சாயம் தோய்க்க.
89. ஒளிர்வண்ணக்குழைவு என்றால் என்ன?
ஒளிர்வுள்ள கரிமச்சேர்மங்களிலிருந்து (கால்சியம் சல்பைடு) செய்யப்படும் பூச்சு. ஒளிபட ஒளிரும்.
90. அவுரி என்றால் என்ன? பயன் யாது?
கருநீலத்தூள். முதன்மைச் சாயம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சாயம், சாயங்கள், என்றால், என்ன, யாது