வேதியியல் :: கரிம வேதியியல்
71. பாதுகாப்புப் பொருள்கள் யாவை?
1. பார்மலின் - இறந்த தாவரங்களிலும் விலங்குகளையும் பாதுகாக்கும் நீர்மம்.
2. ஊறுகாய் - இதில் உப்பு, கடுகு எண்ணெய் பாதுகாப்புப் பொருள்கள்.
72. புளிங்காடி என்றால் என்ன?
வீனிகர். நீர்த்த பனி போன்ற அசெட்டிகக் காடி. ஊறுகாய்ப் பாதுகாப்புப் பொருள்.
73. வினைல் ஈத்தரின் பயன் யாது?
நன்கு எரியக் கூடிய நீர்மம். மயக்க மருந்து.
74. வைட்டமின் முன்பொருள் என்பது யாது?
வைட்டமினுக்கு முந்தியது. எ-டு பீட்டா கரோடின் வைட்டமின் ஏயைத் தருவது.
75. பைரிடாக்சின் என்பது என்ன?
வைட்டமின் பி.
76. பான்தோதெனிக்காடி என்றால் என்ன?
வைட்டமின் தொகுதியைச் சார்ந்தது (A). இது குறையு மானால் தோல் கோளாறு உணவு வழிக்கோளாறு ஆகியவை ஏற்படும்.
77. போலிகக்காடி என்றால் என்ன?
நீரில் கரையக்கூடிய வைட்டமின். பி- தொகுதியில் ஒன்று. பசுங்காய்கறிகளிலும் இலைகளிலும் உள்ளது. இது குறையுமானால் குருதிச்சோகை உண்டாகும்.
78. அடர்மின் என்றால் என்ன?
பைரிடாக்சின், வைட்டமின் B.
79. இதன் பயன் யாது?
பால்காடிக் குச்சி வடிவ உயிர்கள், சில பூஞ்சைகள், ஈஸ்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இது இன்றியமையாதது.
80. பயாட்டின் என்பது என்ன?
வைட்டமின் பி தொகுதியுள் ஒன்று. இதன் பெயர் வைட்டமின் எச்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வைட்டமின், என்ன, என்றால், என்பது, யாது, பாதுகாப்புப்