வேதியியல் :: கரிம வேதியியல்
271. சேஃப்ரோலின் பயன்கள் யாவை?
மஞ்சள் நிறப்படிகம். சவர்க்காரங்களிலும் மணமூட்டும் பொருள்களிலும் பயன்படுவது.
272. வன்மையாக்கல் என்றால் என்ன?
கடினமாக்கல்.
1. நீர்மத்தாவர எண்ணெயைத் திண்மக் கொழுப்பாக மாற்றும் முறை. எ-டு. வனஸ்பதி.
2. உலோகவியலில் எஃகைப் பதப்படுத்தும் முறை.
273. கற்பூரத் தைலம் என்றால் என்ன?
பைன் மரங்களின் பிசுமத்தைக் காய்ச்சி வடிக்க இந்நீர்மம் கிடைக்கும். கரைப்பான்.
274. முக்குளோரோ எத்தனாலின் பயன் யாது?
குளோரால். வலிநீக்கி.
275. முக்குளோரோ எத்திலீன்களின் பயன்கள் யாவை?
நிறமற்ற நீர்மம். தொழிற்சாலைக் கரைப்பான். மயக்க மருந்து. உலர்சலவையில் பயன்படல்.
276. மும்மீத்தேனின் பயன் யாது?
நச்சுத்தடை
277. பார்பிடுரிகக்காடி என்றால் என்ன?
ஒரு வெண்ணிறப் படிகம். தணிப்பு மருந்துகளின் ஊற்றுவாய். பிளாஸ்டிக் தொழிலிலும் பயன்படுவது.
278. பார்பிடுரேட்டுகள் என்றால் என்ன?
பார்பிடுரிகக் காடி உப்புகள். மருந்துத் தொகுதி. எ-டு. அலோனால், வெரோனால், லூமினஸ்.
279. பிக்ரேட் என்பது யாது?
பிக்கரிகக்காடி உப்பு.
280. பினால்ஃப்தலின் என்றால் என்ன?
நீரில் கரையா வெண்ணிறப் படிகம். ஆல்ககாலில் கரையும். காரங்களுடன் சேர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். காடியுடன் சேர்க்க இந்நிறம் நீங்கும். நிலைகாட்டி அல்லது நிறங்காட்டி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, யாது