வேதியியல் :: கரிம வேதியியல்
241. வண்ணக் குழைவிலுள்ள பொருள்கள் யாவை?
1. ஏற்றி (வெகிகள்)
2. உலர்த்தி.
3. நீர்ப்பி (தின்னர்).
4. உரித்தல் தடுப்பி,
5. இளக்கி,
6. நிரப்பி.
242. இப்பொருள்களின் பயன்கள் யாவை?
1. உலோகத்தின் மீதும் மரத்தின் மீதும் சூழ்நிலையைப் பாதிப்பைத் தடுப்பவை.
2. அரிமானத்தைத் தடுப்பவை.
243. உயவிடுதல் என்றால் என்ன?
உயவுப் பொருள்களைப் பயன்படுத்தி உராய்வைக் குறைத்தல்.
244. உயவுப் பொருள்கள் என்றால் என்ன?
இவை மசகுப் பொருள்கள். உராய்வைக் குறைக்கப் பயன்படுபவை.
245. இவற்றின் வகைகள் யாவை?
1. திண்ம உயவுப் பொருள்கள் - மசகு சவர்க்காரம்.
2. நீர்ம உயவுப் பொருள்கள் - கனிம, கரிம எண்ணெய்.
246. இவற்றின் பயன்கள் யாவை?
1. உராய்வினால் ஏற்படும் ஆற்றலிழப்பைத் தடுப்பவை.
2. எந்திர வேலைத்திறன் உயர்தல்.
3. துருப்பிடித்தல், அரிமானம் ஆகியவை தவிர்க்கப்படுதல்.
247. மசகு என்றால் என்ன?
அரைக்கெட்டி நிலையிலுள்ள உயவிடுபொருள். கூழ்மமாகிய பெட்ரோல் எண்ணெய்கள் கொண்டது. கரையக் கூடிய அய்டிரோகார்பன்களும் சவர்க்காரங்களும் இதிலுண்டு.
248. லிம்னோனின் பயன்கள் யாவை?
பயன்மிகு எண்ணெய், கரைப்பான், ரெசின்கள் செய்யப் பயன்படுவது.
249. லினன் என்பது யாது?
பஞ்சுத்துணியிலிருந்து உருவாக்கப்படுவது. இதிலிருந்து பருத்தி, ரேயான் முதலியவை செய்யப்படுபவை.
250. லினாலூலின் பயன் யாது?
பயனுள்ள எண்ணெயில் காணப்படும் டர்பீன். மணமூட்டும் பொருள்களில் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பொருள்கள், யாவை, உயவுப், என்ன, தடுப்பவை, பயன்கள், என்றால்