வேதியியல் :: கரிம வேதியியல்

211. நீர்விரட்டிகள் என்பவை யாவை?
நீரில் படும்பொழுது நனையாமல் இருக்குமாறு செய்யத் தோல், தாள், துணி முதலியவற்றை வெப்பப்படுத்தப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. பலவகை ரெக்சின்கள் அலுமினியம் அசெட்டேட் சிர்கோனியம் அசெட்டேட்
212. கிச்சிலிக்காரணி என்றால் என்ன?
சூழ்நிலைக் கொடுமையை உண்டாக்கும் நச்சுக்காரணிகளில் ஒன்று. வியட்நாம் போரில் அமெரிக்க அரசு இக்காரணி கொண்டு வடக்கு வியட்நாம் காட்டுநிலங்களை அழித்தது.
213. தேய்ப்புப் பொருள்கள் என்றால் என்ன?
மிகக் கடினத் தன்மையும் வலுவுங் கொண்ட பொருள்கள். எ-டு வைரம், படிகக்கல்.
214. இவற்றின் பயன்கள் யாவை?
1. பிற பொருள்களின் புறப்பரப்பைத் தேய்த்துக் குறைக்க.
2. பிற பொருள்களை வெட்ட கரைக்க, மென்மையாக்க.
215. இவற்றின் வகை யாது?
இயற்கை, செயற்கைத் தேய்ப்புப் பொருள்கள்.
216. நொதித்தல் என்றால் என்ன?
இது ஒரு வேதிச்செயல். குளுக்கோஸ் சர்க்கரைக் கரைசல் ஈஸ்ட்டு என்னும் நொதியினால் சாராயமாகவும் கரி இரு ஆக்சைடாகவும் மாறுதல்.
217. நொதித்தலியல் என்றால் என்ன?
நொதித்தல் என்னும் வேதிச்செயலை ஆராயுந் தொழில் நுணுக்கத் துறை.
218. நொதிமானி என்றால் என்ன?
நொதிஅளவை அளக்கப் பயன்படுங் கருவி.
219. நொதிகள் என்பவை யாவை?
இவை உயிரியல் வினையூக்கிகள்.எ-டு டயலின் அமிலேஸ்.
220. நொதிஇயல் என்றால் என்ன?
நொதிகளை ஆராயுந் துறை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பொருள்கள், யாவை