வேதியியல் :: கரிம வேதியியல்

201. இதை உருவாக்கியது யார்?
ஜெர்மன் வேதியியலார் குர்ட் ஆல்டர்.
202. குயின் கைடிரோனின் பயன்கள் யாவை?
பசும்படிகம். ஒளிப்படக் கலையிலும் எதிர் ஆக்சிஜன் ஏற்றியாகவும் பயன்படுவது.
203. குயினைனின் பயன்கள் யாவை?
மிகக் கசப்பான படிகக் காரமம். சின்கோனா பட்டையிலிருந்து பெறப்படுவது. மலேரியாவிற்கு மருந்து.
204. குயினோலைனின் பயன்கள் யாவை?
உப்பைத் தருவது. நிலக்கரித்தாரில் உள்ளது. கரைப்பான். சாயங்கள் செய்யவும் பயன்படுதல்.
205. பிஎச்சி (BHC) என்றால் என்ன?
பென்சீன் அறுகுளோரைடு, உருவமற்றச் சாம்பல் நிறக் கெட்டிப்பொருள். ஆற்றல்மிக்க பூச்சிக்கொல்லி.
206. டீடீடி (DDT) என்றால் என்ன? அதன் பயன் யாது?
இரு குளோரோ இருபினைல் முக்குளோதீன் படிகமற்ற வெள்ளைத்தூள். இரைப்பை நஞ்சு.
207. இதன் வரலாறு யாது?
1874இல் ஒத்தனர் செயில்டர் என்பவரால் தொகுக்கப் பட்டது. 1930இல் இதன் பூச்சிக்கொல்லிப் பண்புகளைப் பால் முல்லர் என்பவர் கண்டறிந்தார்.
208. எண்டோசல்பன் என்றால் என்ன?
மாநிறப்படிகம். நீரில் கரையாது, சைலீனில் கரையும். பூச்சிக்கொல்லி.
209. பார்மலின் என்றால் என்ன?
பார்மல் டிகைடும் (40%) மீத்தைல் ஆல்ககாலும் (8%) நீரும் (52%) சேர்ந்த கலவை. ஒடுக்கி, தொற்றுநீக்கி, பூஞ்சைக்கொல்லி. பாதுகாப்புப் பொருள்.
210. அழுக்குநீக்கி என்றால் என்ன?
நீரின் துப்புரவாக்கும் செயலை உயர்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், யாவை, பயன்கள்