வேதியியல் :: கரிம வேதியியல்
181. குளோரியமானி என்றால் என்ன?
சலவைத் துளிலுள்ள குளோரினை அளக்கப் பயன்படுங் கருவி.
182. குளோரோமைசிட்டினின் பயன் யாது?
நச்சுக் காய்ச்சலுக்கும் அழற்சிக்குமுரிய மருந்து.
183. சைக்ளோபுரோப்பேன் என்றால் என்ன?
இனிய மணமுள்ள நிறமற்ற வளி. மயக்க மருந்து.
184. மார்பைன் என்றால் என்ன?
அபினில் முதன்மையாகவுள்ள காரமம். வலிநீக்கி.
185. மார்போலைன் என்றால் என்ன?
நிறமற்றது. நீர் ஈர்க்கும் நீர்மம். ரெசின்களையும் மெழுகுகளையும் கரைப்பது.
186. உயிரி எதிர்ப்பிகள் என்றால் என்ன?
இவை கரிமச் சேர்மத் தொகுதிகள். நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. நுண்ணுயிர்ச் செயல்களைத் தடைசெய்பவை. எ-டு பெனிசிலின், ஸ்டெப்டோமைசின், ஆரியோமைசின், டெட்ராமைசின்.
187. பென்சால்டிகைடு என்பது யாது?
வாதுமை மனங்கொண்ட மஞ்சள் நிறக்கரிம எண்ணெய். உணவுக்குச் சுவை சேர்க்கவும், சாயங்கள், உயிரி எதிர்ப்புப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுவது.
188. பென்சீன் என்பது என்ன?
மணமுள்ள அய்டிரோகார்பன். கொழுப்பைக் கரைக்கவும் உலர்சலவை செய்யவும் பயன்படுவது.
189. இதை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
பாரடே 1825இல் கண்டுபிடித்தார்.
190. பென்சாயின் என்பது யாது?
ஜாவா மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின். மூச்சுக் கட்டை நீக்கப் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பயன்படுவது, யாது, என்பது